ஆதியாகமம் 46:8-26 - WCV
8
எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு: யாக்கோபின் தலைமகன் ரூபன்.
9
ரூபனின் புதல்வர்கள்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.
10
சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.
11
லேவியின் புதல்வர்: கெர்சோன், கோகாத்து, மெராரி.
12
யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, பெரேட்சு, செராகு.இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர்.எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.
13
இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.
14
செபுலோனின் புதல்வர்: செரேது, ஏலோன், யாகுலவேல்.
15
இவர்கள் லேயாவின் பிள்ளைகள்.இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார்.லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.
16
காத்தின் புதல்வர்.சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏரீ, அரோதி, அரேலி.
17
ஆசேரின் புதல்வர்: இம்னா, இசுவா, இசுவி, பெரியா.இவர்களுடைய சகோதரி செராகு.பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல்.
18
இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள்.இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.
19
யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.
20
யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர்.ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள்.அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.
21
பென்யமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.
22
ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.
23
தாணின் மகன், ஆசும்.
24
நப்தலியின் புதல்வர்: யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.
25
இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள்.இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.
26
யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.