4
“உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
5
இனி உன்பெயர் ஆபிராம் அன்று:”ஆபிரகாம்” என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
6
மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்: உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன்.உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.