2சாமுவேல் 7:27-29 - WCV
27
ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன் என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.
28
தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியவனுக்கு அருளியவர் நீரே!
29
உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியன் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!