1நாளாகமம் 27:16-22 - WCV
16
இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்: சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா:
17
லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா: ஆரோனியருக்குச் சாதோக்கு:
18
யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ: இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி:
19
செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து:
20
எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா: மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்:
21
கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்:
22
தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்: இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.