19
மேலும் ஆண்டவர் மோசேயிடம், “நீ ஆரோனை நோக்கிஉனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும்.ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்” என்றார்.
20
அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர்.ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார்.நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.
21
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது.எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று.எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.