| 1 | பின்னர் படைத்தலைவர்கள் அனைவரும் காரயாகின் மகன் யோகனானும் ஓசயாவின் மகன் ஏசனியாவும் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரும் அருகில் வந்தார்கள். | எரே 42:8 எரே 40:8 எரே 40:13 எரே 41:11 எரே 41:16 எரே 43:4 எரே 43:5 |
| 2 | அவர்கள் இறைவாக்கினர் எரேமியாவிடம் சொன்னது:”எம் வேண்டுகோளைக் கேட்டருளும், எங்களுக்காகவும் எஞ்சியிருக்கும் இவர்கள், அனைவருக்காகவும் உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்-ஏனெனில் நீர் காண்பதுபோல் திரளாக இருந்த எங்களுள் ஒரு சிலரே எஞ்சியிருக்கிறோம்- | எரே 36:7 எரே 37:20 |
| 3 | நாங்கள் நடக்க வேண்டிய வழியையும் செய்யவேண்டிய செயல்களையும் உம் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் காட்டியருள்வாராக.” | எரே 6:16 உபா 5:26 உபா 5:29 1இரா 8:36 எஸ்றா 8:21 சங் 25:4 சங் 25:5 சங் 27:11 சங் 86:11 சங் 143:8-10 நீதி 3:6 ஏசா 2:3 மீகா 4:2 மாற் 12:13 மாற் 12:14 |
| 4 | இறைவாக்கினர் எரேமியா அவர்களை நோக்கி, “நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. அதற்கிணங்க, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் நான் மன்றாடுவேன். ஆணடவர் உங்களுக்குச் சொல்லவிருக்கும் மறுமொழியை உங்களிடம் தெரிவிப்பேன். உங்களிடமிருந்து ஒன்றையும் மறைக்கமாட்டேன்” என்றார். | யாத் 8:29 1சாமு 12:23 ரோம 10:1 |
| 5 | அதற்கு அவர்கள் எரேமியாவிடம் கூறியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உம் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கும் எல்லாச் சொற்களின்படியும் நாங்கள் நடப்போம் என்பதற்கு, ஆண்டவரே நமக்கு இடையில் உண்மையும் நம்பிக்கையும் உள்ள சாட்சி. | எரே 5:2 ஆதி 31:50 யாத் 20:7 நியா 11:10 1சாமு 12:5 1சாமு 20:42 மீகா 1:2 மல்கி 2:14 மல்கி 3:5 ரோம 1:9 வெளிப் 1:5 வெளிப் 3:14 |
| 6 | எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாங்கள் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம். அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம். ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கும் பொழுது, எங்களுக்கு நன்மையே விளையும்.” | ரோம 7:7 ரோம 7:13 ரோம 8:7 |
| 7 | பத்து நாள்களுக்குப் பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. | சங் 27:14 ஏசா 28:16 ஆபகூ 2:3 |
| 8 | எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும், தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரையும் அழைத்தார். | எரே 42:1 எரே 40:8 எரே 40:13 எரே 41:11-16 எரே 43:2-5 |
| 9 | அவர் அவர்களிடம் சொன்னது: உங்கள் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் வைத்து மன்றாடுமாறு நீங்கள் என்னை அனுப்பினீர்கள். அவர் இவ்வாறு கூறுகிறார்: | எரே 42:2 2இரா 19:4 2இரா 19:6 2இரா 19:20-37 2இரா 22:15-20 |
| 10 | நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால், நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்க மாட்டேன்: நிலை நாட்டுவேனேயன்றி, பிடுங்கி எறிய மாட்டேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன். | ஆதி 26:2 ஆதி 26:3 சங் 37:3 |
| 11 | நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேணடாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆணடவர். ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும், அவனுடைய கையினின்று உங்களை விடுவிக்கும் பொருட்டும் நான் உங்களோடு இருக்கிறேன். | எரே 27:12 எரே 27:17 எரே 41:18 2இரா 25:26 மத் 10:28 |
| 12 | நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான். | நெகே 1:11 சங் 106:45 சங் 106:46 நீதி 16:7 |
| 13 | ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, “இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம். | எரே 42:10 எரே 44:16 யாத் 5:2 |
| 14 | நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது: போர்முரசு ஒலிக்காது: உணவுப் பஞ்சம் இராது: நாங்கள் அங்கேயே குடியிருப்போம்” என்று கூறுவீர்களானால், | எரே 41:17 எரே 43:7 உபா 29:19 ஏசா 30:16 ஏசா 31:1 |
| 15 | யூதாவில் எஞ்சியிருப்போரே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எகிப்துக்குச் சென்று, அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால், | எரே 42:17 எரே 44:12-14 ஆதி 31:21 உபா 17:16 தானி 11:17 லூக் 9:51 |
| 16 | உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள் எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்: உங்களுக்குத் திகிலூட்டுகின்ற பஞ்சம் உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்: நீங்கள் அங்கேயே மடிவீர்கள். | எரே 42:13 எரே 44:13 எரே 44:27 உபா 28:15 உபா 28:22 உபா 28:45 நீதி 13:21 எசே 11:8 ஆமோ 9:1-4 சகரி 1:6 யோவா 11:48 |
| 17 | எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர். அவர்களுள் ஒருவனும் எஞ்சியருக்கமாட்டான்: நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான். | எரே 42:22 எரே 24:10 எரே 44:14 |
| 18 | ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: என் சினமும் சீற்றமும் எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று, நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும். நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள். நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். | எரே 6:11 எரே 7:20 எரே 39:1-9 எரே 52:4-11 2இரா 25:4-7 2நாளா 34:25 2நாளா 36:16-19 புலம் 2:4 புலம் 4:11 எசே 22:22 தானி 9:11 தானி 9:27 நாகூ 1:6 வெளிப் 14:10 வெளிப் 16:2-21 |
| 19 | யூதாவில் எஞ்சியிருப்போரே, “நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்” என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். | உபா 17:16 ஏசா 30:1-7 ஏசா 31:1-3 எசே 17:15 |
| 20 | உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்: ஏனெனில், “எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்: அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்: நாங்கள் அவ்வாறே நடப்போம்” என்று கூறி, நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி வைத்தீர்கள். | எரே 3:10 எரே 17:10 சங் 18:44 சங் 65:3 எசே 14:3 எசே 14:4 எசே 33:31 மத் 22:15-18 மத் 22:35-18 கலா 6:7 |
| 21 | நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவுளத்தை இன்று உங்களுக்கு அறிவித்துள்ளேன். நீங்களோ அதற்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையுமே நீங்கள் கண்டுகொள்ளவில்லை. | உபா 11:26 உபா 11:27 எசே 2:7 எசே 3:17 அப் 20:20 அப் 20:26 அப் 20:27 |
| 22 | எனவே நீங்கள் சென்று தங்க விழையும் இடத்திலேயே நீங்கள் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவீர்கள் என்பதை இப்போது திண்ணமாய் அறிந்துகொள்ளுங்கள். | எரே 42:17 எரே 43:11 எசே 5:3 எசே 5:4 எசே 6:11 |