2இராஜாக்கள் 22:15-20 - WCV
15
அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாசிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:
16
ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.
17
ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.
18
ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,
19
'இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்' என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
20
ஆதலால் இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய்” என்றார். அவர்கள் திரும்பிச்சென்று அரசருக்கு இச்செய்தியைத்தெரிவித்தனர்.