அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்: ஆள் பார்த்துச் செயல்படாதவர்: எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?” என்று கேட்டார்கள்.