| 1 | மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்: | எஸ்றா 2:3 நெகே 7:9 |
| 2 | ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்நகரில் தங்கியிருப்பவன் வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடிவான். கல்தேயர் பக்கம் தப்பிச் செல்பவனோ பிழைத்துக்கொள்வான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். அவன் உயிர் பிழைப்பான். | எரே 38:17-23 எரே 21:8 எரே 21:9 எரே 24:8 எரே 27:13 எரே 29:18 எரே 34:17 எரே 42:17 எரே 42:22 எரே 44:13 எசே 5:12-17 எசே 6:11 எசே 7:15 எசே 14:21 மத் 24:7 மத் 24:8 வெளிப் 6:4-8 |
| 3 | ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான். | எரே 21:10 எரே 32:3-5 |
| 4 | பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்: ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள். | எரே 26:11 எரே 26:21-23 எரே 36:12-16 2நாளா 24:21 எசே 22:27 மீகா 3:1-3 செப் 3:1-3 |
| 5 | அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். | 1சாமு 15:24 1சாமு 29:9 2சாமு 3:39 2சாமு 19:22 நீதி 29:25 யோவா 19:12-16 |
| 6 | எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை: சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். | எரே 37:21 சங் 109:5 லூக் 3:19 லூக் 3:20 |
| 7 | அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான். | எரே 39:16-18 |
| 8 | எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, |
| 9 | “என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்: ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார். | எரே 38:1-6 எஸ்தர் 7:4-6 யோபு 31:34 நீதி 24:11 நீதி 24:12 நீதி 31:8 நீதி 31:9 |
| 10 | அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான். | எஸ்தர் 5:2 எஸ்தர் 8:7 சங் 75:10 நீதி 21:1 |
| 11 | எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிரந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார். |
| 12 | எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், “இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்” என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார். | ரோம 12:10 ரோம 12:15 எபே 4:32 |
| 13 | பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே தூக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார். | எரே 38:28 எரே 37:21 எரே 39:14-18 1இரா 22:27 அப் 23:35 அப் 24:23-26 அப் 28:16 அப் 28:30 |
| 14 | அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி,”நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று சொன்னான். | எரே 21:1 எரே 21:2 எரே 37:17 |
| 15 | எரேமியா செதேக்கியாவை நோக்கி, “நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!” என்றார். | லூக் 22:67 லூக் 22:68 |
| 16 | அதற்கு அரசன் செதேக்கியா “நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்” என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான். | எரே 37:17 யோவா 3:2 |
| 17 | எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: “படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள். | சங் 80:7 சங் 80:14 ஆமோ 5:27 |
| 18 | பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்: அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்ககுத் தப்பமாட்டீர்”. | 2இரா 24:12 2இரா 25:27-30 |
| 19 | அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்” என்றான். | எரே 38:5 1சாமு 15:24 யோபு 31:34 நீதி 29:25 ஏசா 51:12 ஏசா 51:13 ஏசா 57:11 யோவா 12:42 யோவா 19:12 யோவா 19:13 |
| 20 | அதற்கு எரேமியா, “இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்: நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர். | எரே 26:13 2நாளா 20:20 தானி 4:27 அப் 26:29 2கொரி 5:11 2கொரி 5:20 2கொரி 6:1 பிலேமோ 1:8-10 யாக் 1:22 |
| 21 | நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்: | எரே 5:3 யாத் 10:3 யாத் 10:4 யாத் 16:28 யோபு 34:33 நீதி 1:24-31 ஏசா 1:19 ஏசா 1:20 எபிரெ 12:25 |
| 22 | யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் 'நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்: உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்' எனக் கூறுவார்கள். | எரே 41:10 எரே 43:6 புலம் 5:11 |
| 23 | உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்: நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்” என்றார். | எரே 38:18 எரே 39:6 எரே 41:10 எரே 52:8-13 2இரா 25:7 2நாளா 36:20 2நாளா 36:21 |
| 24 | அதற்குச் செதேக்கியா எரேமியாவிடம், “நாம் பேசிக் கொண்டது யாருக்கும் தெரியவேண்டாம். அப்படியானால் நீர் சாவுக்குள்ளாகமாட்டீர். |
| 25 | நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, 'நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோம்' என்று சொன்னால், | எரே 38:4-6 எரே 38:27-6 |
| 26 | 'நான் மடிந்துபோகாதவாறு யோனத்தான் வீட்டிற்கு என்னை மீண்டும் அனுப்பிவைக்க வேண்டாம் என்று நான் அரசனை வேண்டிக்கொண்டேன்' என்று நீர் அவர்களிடம் சொல்லி விடும்” என்றான். | எரே 37:15 எரே 37:20 எரே 42:2 எஸ்தர் 4:8 |
| 27 | பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை. | 1சாமு 10:15 1சாமு 10:16 1சாமு 16:2-5 2இரா 6:19 அப் 23:6 |
| 28 | எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார். | எரே 38:13 எரே 15:20 எரே 15:21 எரே 37:21 எரே 39:14 சங் 23:4 2தீமோ 3:11 2தீமோ 4:17 2தீமோ 4:18 |