அப்போஸ்தலர் 24:23-26 - WCV
23
அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால் கடுங்காவல் வேண்டாம்: பணிவடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.
24
சில நாள்களுக்குப் பின்பு பொக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.
25
நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, “இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்” என்று கூறினார்.
26
அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்: ஆகையால் அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.