2
அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே? என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! “ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன் “என்று சொல்:
3
ஈசாயைப் பலிக்க அழைத்திடு: அப்போது நீ என்ன செய்யவேண்டியதென்று நான் உனக்கு அறிவிப்பேன்: நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய் “என்றார்.
4
ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே “என்று கேட்டார்.
5
அதற்கு அவர், “ஆம் சமாதானம்தான்: ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்: உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள் “என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.