1 | தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, | நீதி 8:22-24 நீதி 16:4 மாற் 13:19 யோவா 1:1-3 எபிரெ 1:10 1யோவா 1:1 |
2 | மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது.ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது.நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. | யோபு 26:7 ஏசா 45:18 எரே 4:23 நாகூ 2:10 |
3 | அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். | சங் 33:6 சங் 33:9 சங் 148:5 மத் 8:3 யோவா 11:43 |
4 | கடவுள் ஒளியையும் இருளையும் வௌவேறாகப் பிரித்தார். | ஆதி 1:10 ஆதி 1:12 ஆதி 1:18 ஆதி 1:25 ஆதி 1:31 பிரச 2:13 பிரச 11:7 |
5 | கடவுள் ஒளிக்குப்‘பகல்’ என்றும் இருளுக்கு‘இரவு’ என்றும் பெயரிட்டார்.மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. | ஆதி 8:22 சங் 19:2 சங் 74:16 சங் 104:20 ஏசா 45:7 எரே 33:20 1கொரி 3:13 எபே 5:13 1தெச 5:5 |
6 | அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். | ஆதி 1:14 ஆதி 1:20 ஆதி 7:11 ஆதி 7:12 யோபு 26:7 யோபு 26:8 யோபு 26:13 யோபு 37:11 யோபு 37:18 யோபு 38:22-26 சங் 19:1 சங் 33:6 சங் 33:9 சங் 104:2 சங் 136:5 சங் 136:6 சங் 148:4 சங் 150:1 பிரச 11:3 எரே 10:10 எரே 10:12 எரே 10:13 எரே 51:15 சகரி 12:1 |
7 | கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார்.அது அவ்வாறே ஆயிற்று. | நீதி 8:28 நீதி 8:29 |
8 | கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார்.மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. | ஆதி 1:5 ஆதி 1:10 ஆதி 5:2 |
9 | அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார்.அது அவ்வாறே ஆயிற்று. | யோபு 26:7 யோபு 26:10 யோபு 38:8-11 சங் 24:1 சங் 24:2 சங் 33:7 சங் 95:5 சங் 104:3 சங் 104:5-9 சங் 136:5 சங் 136:6 நீதி 8:28 நீதி 8:29 பிரச 1:7 எரே 5:22 யோனா 1:9 2பேது 3:5 வெளிப் 10:6 |
10 | கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார்.கடவுள் அது நல்லது என்று கண்டார். | ஆதி 1:4 உபா 32:4 சங் 104:31 |
11 | அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார்.அது அவ்வாறே ஆயிற்று. | ஆதி 2:5 யோபு 28:5 சங் 104:14-17 சங் 147:8 மத் 6:30 எபிரெ 6:7 |
12 | புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். | ஏசா 61:11 மாற் 4:28 |
13 | மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. |
14 | அப்பொழுது கடவுள்,“பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! | உபா 4:19 யோபு 25:3 யோபு 25:5 யோபு 38:12-14 சங் 8:3 சங் 8:4 சங் 19:1-6 சங் 74:16 சங் 74:17 சங் 104:19 சங் 104:20 சங் 119:91 சங் 136:7-9 சங் 148:3 சங் 148:6 ஏசா 40:26 எரே 31:35 எரே 33:20 எரே 33:25 |
15 | அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார்.அது அவ்வாறே ஆயிற்று. |
16 | கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். | உபா 4:19 யோசு 10:12-14 யோபு 31:26 யோபு 38:7 சங் 8:3 சங் 19:6 சங் 74:16 சங் 136:7 சங் 136:8 சங் 136:9 சங் 148:3 சங் 148:5 ஏசா 13:10 ஏசா 24:23 ஏசா 45:7 ஆபகூ 3:11 மத் 24:29 மத் 27:45 1கொரி 15:41 வெளிப் 16:8 வெளிப் 16:9 வெளிப் 21:23 |
17 | கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்: | ஆதி 9:13 யோபு 38:12 சங் 8:1 சங் 8:3 அப் 13:47 |
18 | பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வௌவேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார்.கடவுள் அது நல்லது என்று கண்டார். | சங் 19:6 எரே 31:35 |
19 | மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. |
20 | அப்பொழுது கடவுள்,“திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார். | ஆதி 1:22 ஆதி 2:19 ஆதி 8:17 சங் 104:24 சங் 104:25 சங் 148:10 அப் 17:25 |
21 | இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார்.கடவுள் அது நல்லது என்று கண்டார். | ஆதி 6:20 ஆதி 7:14 ஆதி 8:19 யோபு 7:12 யோபு 26:5 சங் 104:24-26 எசே 32:2 யோனா 1:17 யோனா 2:10 மத் 12:40 |
22 | கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். | ஆதி 1:28 ஆதி 8:17 ஆதி 9:1 ஆதி 30:27 ஆதி 30:30 ஆதி 35:11 லேவி 26:9 யோபு 40:15 யோபு 42:12 சங் 107:31 சங் 107:38 சங் 128:3 சங் 144:13 சங் 144:14 நீதி 10:22 |
23 | மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. |
24 | அப்பொழுது கடவுள்,“கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். | ஆதி 6:20 ஆதி 7:14 ஆதி 8:19 யோபு 38:39 யோபு 38:40 யோபு 39:1 யோபு 39:5 யோபு 39:9 யோபு 39:19 யோபு 40:15 சங் 50:9 சங் 50:10 சங் 104:18 சங் 104:23 சங் 148:10 |
25 | கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார்.கடவுள் அது நல்லது என்று கண்டார். | ஆதி 2:19 ஆதி 2:20 யோபு 12:8-10 யோபு 26:13 |
26 | அப்பொழுது கடவுள்,“மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். | ஆதி 3:22 ஆதி 11:7 யோபு 35:10 சங் 100:3 சங் 149:2 ஏசா 64:8 யோவா 5:17 யோவா 14:23 1யோவா 5:7 |
27 | கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். | சங் 139:14 ஏசா 43:7 எபே 2:10 எபே 4:24 கொலோ 1:15 கொலோ 1:26 |
28 | கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி,“பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். | ஆதி 1:22 ஆதி 8:17 ஆதி 9:1 ஆதி 9:7 ஆதி 17:16 ஆதி 17:20 ஆதி 22:17 ஆதி 22:18 ஆதி 24:60 ஆதி 26:3 ஆதி 26:4 ஆதி 26:24 ஆதி 33:5 ஆதி 49:25 லேவி 26:9 1நாளா 4:10 1நாளா 26:5 யோபு 42:12 சங் 107:38 சங் 127:1-5 சங் 128:3 சங் 128:4 ஏசா 45:18 1தீமோ 4:3 |
29 | அப்பொழுது கடவுள்,“மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும். | சங் 24:1 சங் 115:16 ஓசி 2:8 அப் 17:24 அப் 17:25 அப் 17:28 1தீமோ 6:17 |
30 | எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார்.அது அவ்வாறே ஆயிற்று. | ஆதி 9:3 யோபு 38:39-41 யோபு 39:4 யோபு 39:8 யோபு 39:30 யோபு 40:15 யோபு 40:20 சங் 104:14 சங் 145:15 சங் 145:16 சங் 147:9 |
31 | கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார்.அவை மிகவும் நன்றாய் இருந்தன.மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. | யோபு 38:7 சங் 19:1 சங் 19:2 சங் 104:24 சங் 104:31 புலம் 3:38 1தீமோ 4:4 |