5
நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்: அது என்றென்றும் அசைவுறாது.
6
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது: மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது:
7
நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது: நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது:
8
அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது:
9
அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்: பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்: