1ஆபிரகாமின் மகனும் தாவீதின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:ஆதி 2:4 ஆதி 5:1 ஏசா 53:8 லூக் 3:23-38 ரோம 9:5 2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு: ஈசாக்கின் மகன் யாக்கோப்பு: யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.ஆதி 21:2-5 யோசு 24:2 யோசு 24:3 1நாளா 1:28 ஏசா 51:2 லூக் 3:34 அப் 7:8 ரோம 9:7-9 எபிரெ 11:11 எபிரெ 11:17 எபிரெ 11:18 3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்: பெரேட்சின் மகன் எட்சரோன்: எட்சரோனின் மகன் இராம்.ஆதி 38:27 ஆதி 38:29 ஆதி 38:30 ஆதி 46:12 எண் 26:20 எண் 26:21 1நாளா 2:3 1நாளா 2:4 4இராமின் மகன் அம்மினதாபு: அம்மினதாபின் மகன் நகசோன்: நகசோனின் மகன் சல்மோன்.ரூத் 4:19 ரூத் 4:20 1நாளா 2:10-12 5சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு: போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது: ஓபெதின் மகன் ஈசாய்.ரூத் 4:21 1நாளா 2:11 1நாளா 2:12 6ஈசாயின் மகன் தாவீது அரசர்: தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.ரூத் 4:22 1சாமு 16:1 1சாமு 16:11-13 1சாமு 17:12 1சாமு 17:58 1சாமு 20:30 1சாமு 20:31 1சாமு 22:8 2சாமு 23:1 1நாளா 2:15 சங் 72:20 ஏசா 11:1 அப் 13:22 அப் 13:23 7சாலமோனின் மகன் ரெகபயாம்: ரெகபயாமின் மகன் அபியாம்: அபியாமின் மகன் ஆசா.1இரா 11:43 1இரா 12:1-24 1நாளா 3:10 2நாளா 9:31 2நாளா 13:7 8ஆசாவின் மகன் யோசபாத்து: யோசபாத்தின் மகன் யோராம்: யோராமின் மகன் உசியா.1இரா 15:24 1இரா 22:2-50 2இரா 3:1 2நாளா 17:1-20 9உசியாவின் மகன் யோத்தாம்: யோத்தாமின் மகன் ஆகாசு: ஆகாசின் மகன் எசேக்கியா.2இரா 15:7 2இரா 15:32-38 1நாளா 3:11-13 2நாளா 26:21 2நாளா 27:1-9 10எசேக்கியாவின் மகன் மனாசே: மனாசேயின் மகன் ஆமொன்: ஆமொனின் மகன் யோசியா.2இரா 20:21 2இரா 21:1-18 2இரா 24:3 2இரா 24:4 1நாளா 3:13-15 2நாளா 32:33 2நாளா 33:1-19 11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.2இரா 23:31-37 2இரா 24:1-20 1நாளா 3:15-17 2நாளா 36:1-8 எரே 2:10-28 12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்: செயல்தியேலின் மகன் செருபாபேல்.2இரா 25:27 13செருபாபேலின் மகன் அபியூது: அபியூதின் மகன் எலியாக்கிம்: எலியாக்கிமின் மகன் அசோர்.14அசோரின் மகன் சாதோக்கு: சாதோக்கின் மகன் ஆக்கிம்: ஆக்கிமின் மகன் எலியூது.15எலியூதின் மகன் எலயாசர்: எலயாசரின் மகன் மாத்தான்: மாத்தானின் மகன் யாக்கோபு.16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.மத் 1:18-25 மத் 2:13 லூக் 1:27 லூக் 2:4 லூக் 2:5 லூக் 2:48 லூக் 3:23 லூக் 4:22 17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு: தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு: பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.லூக் 1:27-38 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.லேவி 19:20 உபா 22:23 உபா 22:24 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ““யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.சங் 25:8 சங் 25:9 சங் 94:19 சங் 119:125 சங் 143:8 நீதி 3:5 நீதி 3:6 நீதி 12:5 ஏசா 26:3 ஏசா 30:21 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் ““ என்றார்.ஆதி 17:19 ஆதி 17:21 ஆதி 18:10 நியா 13:3 2இரா 4:16 2இரா 4:17 லூக் 1:13 லூக் 1:35 லூக் 1:36 22“ இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் “ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.மத் 2:15 மத் 2:23 மத் 5:17 மத் 8:17 மத் 12:17 மத் 13:35 மத் 13:21 1இரா 8:15 1இரா 8:24 எஸ்றா 1:1 லூக் 21:22 லூக் 24:44 யோவா 10:35 யோவா 12:38-40 யோவா 15:25 யோவா 17:12 யோவா 18:9 யோவா 19:36 யோவா 19:37 அப் 3:18 அப் 13:27-29 வெளிப் 17:17 23இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்முடன் இருக்கிறார் “ என்பது பொருள்.ஏசா 7:14 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.ஆதி 6:22 ஆதி 7:5 ஆதி 22:2 ஆதி 22:3 யாத் 40:16 யாத் 40:19 யாத் 40:25 யாத் 40:27 யாத் 40:32 2இரா 5:11-14 யோவா 2:5-8 யோவா 15:14 எபிரெ 11:7 எபிரெ 11:8 எபிரெ 11:24-31 யாக் 2:21-26 25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.யாத் 13:2 யாத் 22:29 லூக் 2:7 ரோம 8:29