2இராஜாக்கள் 23:31-37 - WCV
31
யோவகாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவனுடைய தாய்.
32
யோவகாசு தன் மூதாயைர்கள் செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
33
அவன் எருசலேமில் அரசாளாதபடி ஆமாத்து நாட்டு இரிபலாவில் பார்வோன் நெக்கோ அவனைச் சிறையிலிட்டான். மேலும் யூதா நாடு நாலாயிரம் கிலோ வெள்ளியும், நாற்பது கிலோ பொன்னும் கப்பமாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டான்.
34
பார்வோன் நெக்கோ யோசியாவின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரசனாக்கி, அவனுடைய பெயரை யோயாக்கிம் என்று மாற்றினான். பின்னர் அவனால் எகிப்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவகாசு அங்கேயே இறந்தான்.
35
பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியையும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான்.
36
யோயாக்கிம் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து அவன் பதினோர் ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டான். ரூமாவைச் சார்ந்த பெதாயாவின் மகள் செபுதா என்பவளே அவனுடைய தாய்.
37
யோயாக்கிம் தன் மூதாதையர் செய்த அனைத்தின்படியே, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.