23
இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது: அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்:
24
ஏலி மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்: லேவி மெல்கியின் மகன்: மெல்கி யன்னாயின் மகன்: யன்னாய் யோசேப்பின் மகன்:
25
யோசேப்பு மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா ஆமோசின் மகன்: ஆமோசு நாகூமின் மகன்: நாகூம் எஸ்லியின் மகன்: எஸ்லி நாகாயின் மகன்:
26
நாகாய் மாத்தின் மகன்: மாத்து மத்தத்தியாவின் மகன்: மத்தத்தியா செமேயின் மகன்: செமேய் யோசேக்கின் மகன்: யோசேக்கு யோதாவின் மகன்:
27
யோதா யோவனானின் மகன்: யோவனான் இரேசாவின் மகன்: இரேசா செருபாபேலின் மகன்: செருபாபேல் செயல்தியேலின் மகன்:
28
செயல்தியேல் நேரியின் மகன்: நேரி மெல்கியின் மகன்: மெல்கி அத்தியின் மகன்: அத்தி கோசாமின் மகன்: கோசாம் எல்மதாமின் மகன்: எல்மதாம் ஏரின் மகன்: ஏர் ஏசுவின் மகன்:
29
ஏசு எலியேசரின் மகன்: எலியேசர் யோரிமின் மகன்: யோரிம் மாத்தாத்தின் மகன்: மாத்தாத்து லேவியின் மகன்:
30
லேவி சிமியோனின் மகன்: சிமியோன் யூதாவின் மகன்: யூதா யோசேப்பின் மகன்: யோசேப்பு யோனாமின் மகன்: யோனாம் எலியாக்கிமின் மகன்: எலியாக்கிம் மெலேயாவின் மகன்:
31
மெலேயா மென்னாவின் மகன்: மென்னா மத்தத்தாவின் மகன்: மத்தத்தா நாத்தானின் மகன்: நாத்தான் தாவீதின் மகன்:
32
தாவீது ஈசாயின் மகன்: ஈசாய் ஓபேதின் மகன்: ஓபேது போவாசின் மகன்: போவாசு சாலாவின் மகன்: சாலா நகசோனின் மகன்: நகசோன் அம்மினதாபின் மகன்:
33
அம்மினதாபு அத்மினின் மகன்: அத்மின் ஆர்னியின் மகன்: ஆர்னி எட்சரோனின் மகன்: எட்சரோன் பெரேட்சின் மகன்: பெரேட்சு யூதாவின் மகன்: யூதா யாக்கோபின் மகன்:
34
யாக்கோபு ஈசாக்கின் மகன்: ஈசாக்கு ஆபிரகாமின் மகன்: ஆபிரகாம் தெராகின் மகன்: தெராகு நாகோரின் மகன்.
35
நாகோர் செரூகின் மகன்: செரூகு இரகுவின் மகன்: இரகு பெலேகின் மகன்: பெலேகு ஏபெரின் மகன்: ஏபேர் சேலாவின் மகன்:
36
சேலா காயனாமின் மகன்: காயனாம் அர்பகசாதின் மகன்: அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன்: நோவா இலாமேக்கின் மகன்:
37
இலாமேக்கு மெத்துசேலாவின் மகன்: மெத்துசேலா ஏனோக்கின் மகன்: ஏனோக்கு எரேதின் மகன்: எரேது மகலலேலின் மகன்: மகலலேல் கேனானின் மகன்: கேனான் ஏனோசின் மகன்:
38
ஏனோசு சேத்தின் மகன் : சேத்து ஆதாமின் மகன்: ஆதாம் கடவுளால் உண்டானவர்.