7
அவ்வாறே, ஆபிரகாமின் மரபில் தோன்றியவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் ஆகிவிடமாட்டார்கள்: ஏனெனில், “ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்” என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.
8
அதாவது இயல்பான முறைப்படி பிறந்த பிள்ளைகளல்ல, வாக்குறுதியின் மூலம் பிறந்த பிள்ளைகளே கடவுளின் பிள்ளைகளாகவும் ஆபிரகாமின் வழிமரபினர்களாகவும் கருதப்படுகின்றனர்.
9
“குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன்: அப்போது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்பதே அந்த வாக்குறுதி.