1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?யோவா 1:7 யோவா 1:12 யோவா 12:38 ரோம 10:16 ரோம 10:17 2இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:ஏசா 11:1 எரே 23:5 எசே 17:22-24 சகரி 6:12 மாற் 6:3 லூக் 2:7 லூக் 2:39 லூக் 2:40 லூக் 2:51 லூக் 2:52 லூக் 9:58 ரோம 8:3 பிலிப் 2:6 பிலிப் 2:7 3அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.ஏசா 49:7 ஏசா 50:6 சங் 22:6-8 சங் 69:10-12 சங் 69:19-12 சங் 69:20-12 மீகா 5:1 சகரி 11:8 சகரி 11:12 சகரி 11:13 மத் 26:67 மத் 27:39-44 மத் 27:63-44 மாற் 9:12 மாற் 15:19 லூக் 8:53 லூக் 9:22 லூக் 16:14 லூக் 23:18-25 யோவா 8:48 எபிரெ 12:2 எபிரெ 12:3 4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.ஏசா 53:5 ஏசா 53:6 ஏசா 53:11 ஏசா 53:12 மத் 8:17 கலா 3:13 எபிரெ 9:28 1பேது 2:24 1பேது 3:18 1யோவா 2:2 5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.ஏசா 53:6-8 ஏசா 53:11-8 ஏசா 53:12-8 தானி 9:24 சகரி 13:7 மத் 20:28 ரோம 3:24-26 ரோம 4:25 ரோம 5:6-10 ரோம 5:15-21 1கொரி 15:3 2கொரி 5:21 எபே 5:2 எபிரெ 9:12-15 எபிரெ 10:10 எபிரெ 10:14 1பேது 3:18 6ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.சங் 119:176 மத் 18:12-14 லூக் 15:3-7 ரோம 3:10-19 1பேது 2:25 7அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.மத் 26:63 மத் 27:12-14 மாற் 14:61 மாற் 15:5 லூக் 23:9 யோவா 19:9 1பேது 2:23 8அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.சங் 22:12-21 சங் 69:12 மத் 26:65 மத் 26:66 யோவா 19:7 9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.மத் 27:57-60 மாற் 15:43-46 லூக் 23:50-53 யோவா 19:38-42 1கொரி 15:4 10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.ஏசா 42:1 மத் 3:17 மத் 17:5 11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.லூக் 22:44 யோவா 12:24 யோவா 12:27-32 யோவா 16:21 கலா 4:19 எபிரெ 12:2 வெளிப் 5:9 வெளிப் 5:10 வெளிப் 7:9-17 12ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்: அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்: ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்: கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்: ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 52:15 ஆதி 3:15 சங் 2:8 தானி 2:45 மத் 12:28 மத் 12:29 அப் 26:18 பிலிப் 2:8-11 கொலோ 1:13 கொலோ 1:14 கொலோ 2:15 எபிரெ 2:14 எபிரெ 2:15