12
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன: பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.
13
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
14
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.
15
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
16
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்: என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
17
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
20
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்: இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்:
21
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்: காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.