10
நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்: அதுவே எனக்க இழிவாய் மாறிற்று.
11
சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்: ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.
12
நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்: குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.