வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 6

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
2ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில், நான் தளர்ந்து போனேன்: ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்: ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.
3என் உயிர் ஊசலாடுகின்றது: ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4ஆண்டவரே, திரும்பும்: என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
5இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை: பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
6பெருமூச்சினால் இளைத்துப் போனேன்: ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று: என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
8தீங்கிழைப்போரே! நீPங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
9ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்: அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்: அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.