வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஓசியா 3

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப் பட்டவளும் விபசாரியுமான ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்.”
2அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும் ஒன்றரை கலம் அளவுள்ள வாற் கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக் கொண்டேன்.
3பின்பு நான் அவளை நோக்கி, “நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமை யாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்” என்றேன்.
4இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குல தெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.
5அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்: இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.