வேதாகமத்தை வாசி

Click to Subscribe

ஏசாயா 12

                   
புத்தகங்களைக் காட்டு
1அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: “ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்: நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்: இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது: நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
2இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்: மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்: அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்: ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்: அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.
6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்: இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.