வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களின்ஙகள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?
2ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்: ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்:
3'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்: அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.
4விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்: என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
5அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்: கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்:
6'என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருpநிலைப்படுத்தனேன்.'
7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: 'நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்: பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்: பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்: குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.'
10ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்: பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
11அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்: நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!
12அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்: இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும: அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.