வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்:
2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்:
3அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.
4ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
5பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.
6நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.