1 | எபிரோனில் தாவீதுக்குப் பிறந்த புதல்வர் இவர்களே: இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாம் பெற்றெடுத்த தலைமகன் அம்னோன்: கர்மேலைச் சார்ந்த அபிகாயில் பெற்றெடுத்த தானியேல் இரண்டாமவர்: |
2 | கெசூரின் அரசன் தல்மாய் மகள் மாக்கா பெற்றெடுத்த அப்சலோம் மூன்றாமவர்: அகீத்து பெற்றெடுத்த அதோனியா நான்காமவர்: |
3 | அபித்தால் பெற்றெடுத்த செப்பத்தியா ஐந்தாமவர்: மனைவி எக்லா பெற்றெடுத்த இத்ரயாம் ஆறாமவர். |
4 | இந்த ஆறு பேரும் எரிரோனில் அவருக்குப் பிறந்தவர்கள். அங்கே அவர் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செலுத்தினார். எருசலேமிலோ முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். |
5 | எருசலேமில் அவருக்குப் பிறந்தோர் இவர்களே: அம்மியேலின் புதல்வி பத்சூவா பெற்றெடுத்த சிமயா, சோபாபு, நாத்தான், சாலமோன் ஆகிய நால்வர். |
6 | ஏனையோர்: இப்கார், எலிசாமா, எலிப்பலேற்று, |
7 | நோகாகு, நெபேகு, யாப்பியா, |
8 | எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று ஆகிய ஒன்பது பேர். |
9 | இவர்கள் அனைவரும் தாவீதின் புதல்வர்: மற்றும் இவர்களின் சகோதரி தாமார்: இன்னும் மறுமனைவியர் மூலம் அவருக்கு வேறு புதல்வரும் இருந்தனர். |
10 | சாலமோனின் புதல்வர்: இரகபெயாம், அவர் மகன் அபியா, அவர் மகன் ஆசா, அவர் மகன் யோசபாத்து. |
11 | அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு, |
12 | அவர் மகன் அமட்சியா, அவர் மகன் அசரியா, அவர் மகன் யோத்தாம், |
13 | அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே, |
14 | அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா. |
15 | யோசியாவின் புதல்வர்: தலைமகன் யோகனான், இரண்டாமவர் யோயாக்கிம், மூன்றாமவர் செதேக்கியா, நான்காமவர் சல்லூம். |
16 | யோயாக்கிமின் புதல்வர்: அவர் மகன் எக்கொனியா, அவர் மகன் செதேக்கியா. |
17 | சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்: அவர் மகள் செயல்தியேல், |
18 | மல்கிராம், பெதாயா, செனாட்சர், எக்கமியா, ஒசாமா, நெதமியா. |
19 | பெதாயாவின் புதல்வர்: செருபாபேல், சிமயி: செருபாபேலின் புதல்வர்: மெசுல்லாம், அனனியா, அவர்களின் சகோதரி செலோமித்து |
20 | மற்றும் ஆசுபா, ஒகேல், பெரக்கியா, அசதியா, 'யூசபு கெசேது' என்னும் ஐவர். |
21 | அனனியாவின் புதல்வர்: பெலற்றியா, ஏசாயா: அவர் மகன் இரபாயா: அவர் மகன் அர்னான்: அவர் மகன் ஒபதியா: அவர் மகன் செக்கனியா. |
22 | செக்கனியாவின் புதல்வர்: செமாயா: அவர் புதல்வர்: அற்றூசு, இகால், பாரியகு, நெயரியா, சாபாற்று ஆக மொத்தம் அறுவர். |
23 | நெயரியாவின் புதல்வர்: எலியோவனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூவர். |
24 | எலியோவனாயின் புதல்வர்: ஓதவியா, எலியாசிபு, பெலாயா, அக்கூபு, யோகனான், தெலாயா, அனானி என்னும் எழுவர். |