1 | யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால். |
2 | சோபாலின் மகன் இரயாயாவுக்கு யாகத்து பிறந்தார்: யாகத்துக்கு அகுமாயும் இலாகாதும் பிறந்தனர்: சோராவியர் குடும்பங்கள் இவையே. |
3 | ஏத்தாம் என்னும் மூதாதையின் வழிமரபினர் இவர்கள்: இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு: அவர்களின் சகோதரி பெயர் அட்சலெல்போனி. |
4 | மேலும் கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள். |
5 | தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூருக்கு ஏலா, நாரா என்னும் இரு மனைவியர் இருந்தனர். |
6 | நாரா அவருக்கு அகுசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தாரி ஆகியோரைப் பெற்றெடுத்தாள்: நாராவின் புதல்வர் இவர்களே. |
7 | ஏலாவின் புதல்வர்: செரேத்து, இட்சகார், எத்னான். |
8 | அனுபு, சோபேபா, ஆரூம் மகன் அகரகேலின் குடும்பத்தினர் ஆகியோருக்குக் கோசு தந்தை. |
9 | யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் 'நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்' என்று சொல்லி அவருக்கு 'யாபேசு' என்று பெயரிட்டார். |
10 | யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி,;கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக! ; என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார். |
11 | சூகாவின் சகோதரருக்குக் கெலுபுக்கு மெகீர் பிறந்தார். அவர் எஸ்தோனின் மூதாதை. |
12 | எஸ்;தோனுக்கு பெத்ராபா, பாசயாகு, ஈர்னகாசின் மூதாதை தெகின்னா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் இரேக்காவில் வாழும் மனிதர்கள். |
13 | கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா: ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய். |
14 | மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்: கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார். |
15 | எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்: ஏலாவின் மகன் கெனானி. |
16 | எகலலேலின் புதல்வர்: சீபு, சிப்பா, தீரியா, அசரேல். |
17 | எஸ்;ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்: |
18 | மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்: கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல். |
19 | நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்: கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை. |
20 | சீமோனின் புதல்வர்: அம்னோன், ரின்னா, பென்கனான், தீலோன்: இசீயின் புதல்வர்: சோகேத்து, பென்சோகேத்து. |
21 | யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயாவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள், |
22 | யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை. |
23 | அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர். |
24 | சிமியோனின் புதல்வர்: நெமுவேல், யாமின், யாரிபு, செராகு, சாவூல் |
25 | அவர் மகன் சல்லூம், அவர் மகன் மிப்சாம், அவர் மகன் மிஸ்மா. |
26 | மிஸ்மாவின் புதல்வர்: அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி. |
27 | சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்: அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை: அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை. |
28 | அவர்கள் குடியேறிய இடங்கள்: பெயேர்செபா, மேலதா, அட்சார் சூவால், |
29 | பில்கா, எட்சேம், தோலாது, |
30 | பெத்துவேல், ஒர்மா, கீக்லாகு, |
31 | பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன. |
32 | அவர்கள் வாழ்ந்த ஐந்து வேறு இடங்கள்: ஏத்தாம், அயின்: ரிம்மோன், தோக்கேன், ஆசான்: |
33 | இந்நகர்களைச் சுற்றிலும் பாகால்வரை அமைந்த அனைத்துச் சிற்றூர்களும் அவர்களுடையவை. இவை அவர்களின் குடியிருப்புகள்: அவர்கள் தங்களுக்கென ஒரு தலைமுறைக் குறிப்பேடு வைத்திருந்தனர். |
34 | மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா, |
35 | யோவேல், அசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூ, |
36 | எலியோவனாய், யாக்கோபா, எசோகாயா, அசாயா, அதியேல், எசிமியேல், பெனாயா, |
37 | செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா. |
38 | பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர். |
39 | அவர்கள் தங்கள் மந்தைக்கு மேய்ச்சலைத் தேடிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் கெதோர் நுழைவுவரை சென்றனர். |
40 | அங்கே அவர்கள் செழிப்புமிகு, நல்ல மேய்ச்சலைக் கண்டார்கள். நிலம் விரிந்து பரந்து, அமைதியுடனும் வளத்துடனும் இருந்தது. காமைச் சார்ந்தோர் முன்பு அங்குக் குடியிருந்தனர். |
41 | பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள். |
42 | சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஐந்நூறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர். |
43 | அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர். |