1 | இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார்.அவர் கூறியது: | எண் 10:11 எண் 10:12 யாத் 19:1 லேவி 27:34 |
2 | இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள். | எண் 26:2-4 எண் 26:63-4 எண் 26:64-4 யாத் 30:12 யாத் 38:26 2சாமு 24:1-3 1நாளா 21:1 1நாளா 21:2 1நாளா 27:23 1நாளா 27:24 |
3 | இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள். | எண் 14:29 எண் 32:11 யாத் 30:14 |
4 | ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்: அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும். | எண் 1:16 எண் 2:3-31 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 13:2-15 எண் 17:3 எண் 25:4 எண் 25:14 எண் 34:18-28 யாத் 18:25 யோசு 22:14 1நாளா 27:1-22 |
5 | உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன: ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்: இவன் செதேயூர் மகன்: | எண் 2:10 எண் 7:30 எண் 10:18 ஆதி 29:32-35 ஆதி 30:5-20 ஆதி 35:17-26 ஆதி 46:8-24 ஆதி 49:1-33 யாத் 1:2-5 உபா 33:1-29 வெளிப் 7:4-8 |
6 | சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்: இவன் சுரிசத்தாய் மகன்: | எண் 2:12 எண் 7:36 |
7 | யூதா குலத்திலிருந்து நகுசோன்: இவன் அம்மினதாபின் மகன்: | எண் 2:3 எண் 7:12 எண் 10:14 ரூத் 4:18 1நாளா 2:10 1நாளா 2:11 மத் 1:2-5 லூக் 3:32 |
8 | இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்: இவன் சூவார் மகன்: | எண் 2:5 எண் 7:18 எண் 10:15 |
9 | செபுலோன் குலத்திலிருந்து எலியாபு: இவன் கேலோன் மகன்: | எண் 2:7 எண் 7:24 எண் 10:16 |
10 | யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்: மனாசே குலத்திலிருந்து கமாலியேல்: இவன் பெதாசூரின் மகன்: | எண் 2:18 எண் 7:48 எண் 10:22 1நாளா 7:26 1நாளா 7:27 |
11 | பென்யமின் குலத்திலிருந்து அபிதான்: இவன் கிதயோனின் மகன்: | எண் 2:22 எண் 7:60 எண் 10:24 |
12 | தாண் குலத்திலிருந்து அகியசேர்: இவன் அம்மிசத்தாயின் மகன்: | எண் 2:25 எண் 7:66 எண் 10:25 |
13 | ஆசேர் குலத்திலிருந்து பகியேல்: இவன் ஒக்ரானின் மகன்: | எண் 2:27 எண் 7:72 எண் 10:26 |
14 | காத்து குலத்திலிருந்து எல்யாசாபு: இவன் தெகுவேலின் மகன்: | எண் 7:42 எண் 10:20 |
15 | நப்தலி குலத்திலிருந்து அகிரா: இவன் ஏனானின் மகன்: | எண் 2:29 எண் 7:78 எண் 10:27 |
16 | மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே.இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர். | எண் 2:3-31 எண் 7:2 எண் 7:10-83 எண் 10:14-27 எண் 11:17 எண் 16:2 எண் 26:9 நியா 6:15 1நாளா 27:16-22 |
17 | பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். | எண் 1:5-15 யோவா 10:3 வெளிப் 7:4-17 |
18 | இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர்.அவர்கள் தங்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர். | எஸ்றா 2:59 நெகே 7:61 எபிரெ 7:3 எபிரெ 7:6 |
19 | ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே: அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார். | எண் 1:2 எண் 26:1 எண் 26:2 2சாமு 24:1-10 |
20 | இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்: | எண் 2:10 எண் 2:11 எண் 26:5-7 ஆதி 29:32 ஆதி 46:9 ஆதி 49:3 ஆதி 49:4 1நாளா 5:1 |
21 | ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறு பேர். | எண் 2:10 எண் 2:11 எண் 26:7 |
22 | சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்: | எண் 2:12 எண் 2:13 எண் 26:12-14 ஆதி 29:33 ஆதி 34:25-30 ஆதி 42:24 ஆதி 46:10 ஆதி 49:5 ஆதி 49:6 |
23 | சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர். | எண் 2:13 எண் 25:8 எண் 25:9 எண் 25:14 எண் 26:14 |
24 | காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | எண் 2:14 எண் 2:15 எண் 26:15-18 ஆதி 30:10 ஆதி 30:11 ஆதி 46:16 ஆதி 49:19 |
25 | காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர். | எண் 2:15 எண் 26:18 |
26 | யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | எண் 2:3 எண் 2:4 எண் 26:19-22 ஆதி 29:35 ஆதி 46:12 ஆதி 49:8-12 2சாமு 24:9 1நாளா 5:2 2நாளா 17:14-16 |
27 | யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர். | எண் 2:3 எண் 2:4 எண் 26:22 2சாமு 24:9 2நாளா 17:14-16 |
28 | இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | எண் 2:5 எண் 2:6 எண் 23:23-25 ஆதி 30:18 ஆதி 46:13 ஆதி 49:14 ஆதி 49:15 |
29 | இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து நாலாயிரத்து நானூறு பேர். | எண் 2:6 எண் 26:25 |
30 | செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | எண் 2:7 எண் 2:8 எண் 26:26 எண் 26:27 ஆதி 30:20 ஆதி 46:14 ஆதி 49:13 |
31 | செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்தேழாயிரத்து நானூறு பேர். | எண் 2:8 எண் 26:27 |
32 | யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | எண் 2:18 எண் 2:19 எண் 26:35-37 ஆதி 30:24 ஆதி 37:1-36 ஆதி 39:1-23 ஆதி 46:20 ஆதி 48:1-22 ஆதி 49:22-26 உபா 33:17 |
33 | எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர். | ஆதி 48:5 உபா 33:17 |
34 | மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: |
35 | மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். | எண் 2:21 எண் 26:34 ஆதி 48:19 ஆதி 48:20 |
36 | பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | ஆதி 35:16-18 ஆதி 44:20 ஆதி 46:21 ஆதி 49:27 |
37 | பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானூறு பேர். | எண் 2:23 எண் 26:41 நியா 20:44-46 2நாளா 17:17 |
38 | தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | ஆதி 30:5 ஆதி 30:6 ஆதி 46:23 ஆதி 49:16 ஆதி 49:17 |
39 | தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர். | எண் 2:26 எண் 26:43 |
40 | ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | ஆதி 30:12 ஆதி 30:13 ஆதி 46:27 ஆதி 49:20 |
41 | ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு பேர். | எண் 2:28 எண் 26:47 |
42 | நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்: | ஆதி 30:7 ஆதி 30:8 ஆதி 46:24 ஆதி 49:21 |
43 | நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர். | எண் 2:30 எண் 26:50 |
44 | மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே. | எண் 1:2-16 எண் 26:64 |
45 | ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை: |
46 | மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். | எண் 2:32 எண் 23:10 எண் 26:51 ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:6 ஆதி 22:17 ஆதி 26:3 ஆதி 28:14 ஆதி 46:3 ஆதி 46:4 யாத் 12:37 யாத் 38:26 உபா 10:22 1இரா 4:20 2சாமு 24:9 1நாளா 21:5 2நாளா 13:3 2நாளா 17:14-19 எபிரெ 11:11 எபிரெ 11:12 வெளிப் 7:4-9 |
47 | ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை. | எண் 1:3 எண் 1:50 எண் 2:33 எண் 3:1-51 எண் 4:1-49 எண் 8:1-26 எண் 26:57-62 1நாளா 6:1-81 1நாளா 21:6 |
48 | ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: |
49 | லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்: இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்: | எண் 2:33 எண் 26:62 |
50 | லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து: அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்: அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள். | எண் 3:1-10 எண் 4:15 எண் 4:25-33 யாத் 31:18 யாத் 32:26-29 யாத் 38:21 1நாளா 23:1-32 1நாளா 25:1-26 எஸ்றா 8:25-30 எஸ்றா 8:33-30 எஸ்றா 8:34-30 நெகே 12:8 நெகே 12:22 நெகே 12:47 நெகே 13:5 நெகே 13:10-13 நெகே 13:22-13 |
51 | புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்: கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர்.வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான். | எண் 4:5-33 எண் 10:11 எண் 10:17-21 |
52 | இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர். | எண் 2:2 எண் 2:34 எண் 10:1-36 எண் 24:2 |
53 | லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்: உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே. | எண் 1:50 எண் 3:7 எண் 18:3 1தீமோ 4:13-16 2தீமோ 4:2 2தீமோ 8:19 2தீமோ 16:46 2தீமோ 18:5 லேவி 10:6 1சாமு 6:19 எரே 5:31 எரே 23:15 அப் 20:28-31 |
54 | இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர். | எண் 2:34 யாத் 23:21 யாத் 23:22 யாத் 39:32 யாத் 39:43 யாத் 40:16 யாத் 40:32 உபா 12:32 1சாமு 15:22 மத் 28:20 |