கட்டுரைகள்
BSI – Bible Society of India (O.V. – Old Version)
இந்திய வேதாகமச் சங்கம் (பழைய பதிப்பு)
©Bible Society of India

இந்திய வேதாகம சங்கத்தின் பழைய பதிப்பாகும். இந்த பதிப்பை தான் நாம் இன்று பொதுவாக பயன்படுத்துகிறோம். இது பவர் திருப்புதல் என்றும் அழைக்கப்படுகிறது.

 
 
IRV – Indian Revised Version
திருத்திய இந்திய பதிப்பு
© Bridge Connectivity Solutions

நாம் பொதுவாக பயன்படுத்தும் இந்திய வேதாகம சங்கத்தின் பதிப்பில் உள்ள அர்த்தம் புரியாத கடினமான வார்தைகள், தற்காலத்தில் புரிந்துக்கொள்ளக் கூடிய வார்த்தைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் ‘ஷ, ஸ, க்ஷ’ போன்ற வடமொழி எழுத்துக்கள் நீக்கப்பட்டு அதற்கு இணையான தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வசன உதாரணம் – யோவான் 3:16

IRV: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார்.

BSI: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

 
 
ERV – Easy to Read Version
எளிய வாசிப்பு பதிப்பு
© Bible League International

அகில உலக வேதாகம சங்கத்தினரால் சமீபத்தில் (2008) மொழியாக்கம் செய்யப்பட்ட பதிப்பாகும். இது நாம் பொதுவாக பயன்படுத்தும் பதிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

வசன உதாரணம் – யோவான் 3:16

ERV: ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.

BSI: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

 
 
TVM – Thiruvivilium - Ecumenical
திருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு
© TNBCLC

தமிழக கத்தோலிக்க நடுநிலையமும் (TNBCLC), அனைத்துலக வேதாகம சங்கமும் (United Bible Society - USB) இணைந்து, 1995-ஆம் ஆண்டு வெளியிட்ட மொழிபெயர்ப்பாகும். 

 

 

KJV – King James Version
ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பு

இது நாம் பரவலாக அறிந்த ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பாகும். நம்பத்தகுந்த ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு படிக்கும்வகையில் இந்த மொழிபெயர்ப்பை தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

 

இணைவசன வேதாகமம்

 நமது தளத்தில் உள்ள ஒவ்வொரு வேதாகம பதிப்பிற்கும் இணைவசன வேதாகமத்தையும் வெளியிட்டிருக்கிறோம். இந்த இணை வசன வேதாகமம், ஆங்கிலத்தில் உள்ள Treasury of Scripture Knowledge (TSK)-லிருந்து நேரடியாக தமிழுக்கு மாற்றப்பட்டதாகும். இந்த TSK, முழுவதும் KJV ஆங்கிலப் பதிப்பை மைய்யமாக வைத்து தயாரிக்கப்பட்டதாகும். தமிழ் மற்றும் ஆங்கில வேதாகமங்களுக்கிடையில் சில இடங்களில் வசன எண்கள் மாறுபடும்.

உதாரணமாக, ஆங்கில வேதாகமத்தில் (KJV) 1பேதுரு 1ம் அதிகாரத்தில் 3ம் வசனத்தின் பின்பகுதி தமிழ் வேதாகமத்தில் 4ம் வசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

KJV: 3. Blessed be the God and Father of our Lord Jesus Christ, which according to his abundant mercy hath begotten us again unto a lively hope by the resurrection of Jesus Christ from the dead,

4. To an inheritance incorruptible, and undefiled, and that fadeth not away, reserved in heaven for you,

BSI: 3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

4. அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

இது போன்று வெகுச்சில இடங்களில் காணப்படும் வசன வித்தியாசங்களை வாசகர்கள் கவனத்தில் கொண்டு, ஆங்கில வேதாகமத்துடன் (KJV) ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.