கட்டுரைகள்

WhatsApp Image 2025 01 03 at 11.13.35 99f1a614

 

ஆசிரியர்: கருண்குமார்

தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்.

 

 

சில மாதங்களுக்கு முன்பு நான் ஒரு பேருந்து பயணத்தில் என் அருகில் அமர்ந்திருந்தவரிடம் சிறிது நேரம் பேசுவோம், முடிந்தால் சுவிசேஷத்தை அவருக்கு அறிவிக்கலாம் என்று அவரிடம் நான் உரையாட ஆரம்பித்தேன். "உங்கள் பெயர் என்ன, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று உரையாடலைத் தொடங்கினேன். அதற்கு அவர், "என் பெயர் எலியா, நான் பால் வியாபாரி" என்றார். “எலியா என்பதன் வேதாகமத்தின் பெயர் அல்லவா! என்று எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மறுபடியும் நான் அவரிடம் "நீங்கள் ஆராதனைக்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டேன். "நான் எப்போதாவது செல்வதுண்டு, ஆனால் என் வீட்டில் அனைவரும் செல்வார்கள், நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தாத்தா காலத்திலிருந்தே எங்கள் குடும்பத்தார்கள் அனைவர்களும் கிறிஸ்தவர்கள் தான்,'' என்றார். அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது, கிறிஸ்தவம் என்றால் என்ன? கிறிஸ்தவர்கள் என்றால் யார் என்பதை அவருக்கு மெதுவாகவும், தெளிவாகவும் சொல்ல முயற்சித்தேன். அப்போது அவர், என்னை பார்த்து "நீங்கள் சொல்பவர்கள் மட்டும் உண்மையான கிறிஸ்தவர்கள் என்றால், எனக்குத் தெரிந்தவரை பூமியில் யாருமே கிறிஸ்தவர்களாக இருக்க மாட்டார்கள்" என்றார். அதற்கு நான் இவ்விதமாக சொன்னேன், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சகோதரரே! பலர் இருக்கிறார்கள், நீங்களும் கூட கிறிஸ்துவனாக இருக்கலாம்." என்று சொன்னேன்.

இன்று பலர் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். திருச்சபைக்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும், பண்டிகைகளிலும், சிறப்பான கூட்டத்திற்குச் செல்லும் அனைவரையும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கபடுவது சரியா? கிறிஸ்தவ குடும்பங்களில் பிறந்தவர்கள், அல்லது இருப்பவர்கள் தானாக கிறிஸ்தவர்களாக மாறிவிடமுடியுமா? சில ஜாதி மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களா? என்று பார்த்தால் இல்லவே இல்லை. உண்மையான கிறிஸ்தவர்கள் என்றால் யார்? தேவனுடைய வார்த்தையிலிருந்து கவனமாகக் கற்றுக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களையும் அல்லது அவரது சீஷர்களையும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர் 11:26 -ல் “முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.” என்று பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம். வேத வார்த்தையின்படி, ஒரு நபர் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுவதற்கு சில குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களின் கிறிஸ்தவப் பயணம் எவ்வாறு தொடங்குகிறதொ மற்றும் அவர்களின் தொடக்க நிலை எவ்வாறு துவங்குகிறதோ என்பதை வேத வசனத்தின்படி பார்ப்போம்.

1. மறுபடியும் பிறந்தவர்கள்.

ஒரு மனிதனின் இரட்சிப்பின் முதல்படி அவன் மீண்டும் பிறப்பதிலிருந்தே தொடங்குகிறது. “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (யோவான் 3:3) -ம் வசனத்தில் பார்க்கிறோம். இது தேவனின் செயல். பரிசுத்த ஆவியானவர் கல்லான இதயத்தை அகற்றி, மாம்சமான இதயத்தை உங்களுக்குத் தருவார். என்று எசேக்கியல் அதிகாரம் 36:26-வது வசனத்தில் பார்கிறோம். ஒரு நபரில் இரட்சிப்பின் செயலை துவங்கி கிறிஸ்துவின் நாள் வரைக்கும் வழி நடத்துகிறவார் தேவனே! என்று (பிலிப்பியர் 1:6), (எபேசியர் 1:3-12, 2:1-10) ஆகிய வசனங்களில் நாம் தெள்ள தெளிவாக பார்க்கமுடியும். அனைத்து மனிதர்களும் அவர்களுடைய பாவத்தினால் தேவனிடம் தன்னுடைய முயற்சினால் கிட்டி சேரமுடியாது, ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையில் இருக்கிறார்கள் என்றும், தேவனே! கிருபையினால் அவர்களை பாவத்திலிருந்து பிழைக்க செய்கிறார், என்று (எபேசியர் 2:4-5) வசனத்தில் பார்க்கமுடியும். இந்த மரித்த நிலையிலிருந்து உயிரடைய செய்வதே மறுபிறப்பு எனப்படும். விழ்சியடைந்த இந்த உலகத்தில் பாவம், சாபம் என அந்தகராத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் மீது இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தின் வெளிச்சம் பிரகாசிக்கும் போது அந்த வெளிச்சத்திற்கு ஏற்ற விதமாக அவர்கள் உணர்வடைவார்கள். ஆதி திருச்சபையில் அவ்விதமாக இருந்தார்கள் என்று அப்போஸ்தலர் அதிகாரம் 2:37-42 வரையுள்ள வசனத்தில் நாம் பார்க்கிறோம். இன்றைய காலகட்டத்தில் திருச்சபையில் உள்ள அங்கத்தவர்கள் உண்மையாகவே மீண்டும் பிறந்தார்களா? அவர்களுக்கு அப்போஸ்தலர்களால் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த சுவிசேஷத்தை அவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டதா? என்பதை நம்முடைய கருத்தில் கொள்ள வேண்டும்.

2. பாவத்திற்காக மனவருத்தம் அடைந்தவர்கள்.

ஆதி திருச்சபையில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கிக்கப்பட்ட போது, ​​அவர்கள் தங்கள் பாவ நிலையைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்து, எங்களுடைய பாவங்களுக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்தாதாக அப்போஸ்தலர் அதிகாரம் 2:37 வது வசனத்தில் பார்க்கிறோம். மறுபிறப்படைந்த யாராக இருந்தாலும், முதலில் சுவிசேஷத்தைக் கேட்கும்போது, ​​அதன் அவசியத்தை உணர்ந்து, தங்கள் பாவங்களின் தீவிரத்தை உணர்கிறார்கள். அந்த பாவத்திற்காக அவர்கள் வெட்கப்பட்டு, தேவனுக்கு முன்பாக மனந்திரும்புகிறார்கள். சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் அவர்கள் தேவனின் மகா பரிசுத்தத்தையும், மனிதனின் கொடிய பாவத்தையும் உணர்ந்தவர்கள் கண்ணீருடன் தங்களின் பாவங்களை தேவனிடம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது.

"பரிசுத்தமான தேவனே, என்னுடைய மோசமான பாவங்களை மன்னியும், என்று மனவருத்தத்தோடு குத்தப்பட்ட இருதயத்துடனும், வேதனையுடனும், தேவனின் இரக்கத்திற்காகவும், பாவமன்னிப்புக்காக மன்றடுவார்கள். அத்தகைய உண்மையான தெய்வீக மனந்திரும்புதல் இரட்சிப்புக்கு வழி நடத்துகிறது. அவர்கள் பாவ மன்னிப்பு, மற்றும் பாவத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என்பதை . (1 யோவான் 1:9) வசனத்தில் தெளிவாக பார்க்கிறோம். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” இப்படிப்பட்ட தெய்வீக, இரட்சிப்பையும், மனந்திரும்புதலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? இல்லையெனில் நீங்கள் இன்னும் உண்மையான இரட்சிப்பை பெறவில்லையோ என்பதை சிந்தியுங்கள்.

3. மனமாற்றம் அடைந்தவர்கள்.

பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு அடைந்தவர்களாகிய நீங்கள், உங்களுக்கு அறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் சுவிஷேசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, தங்கள் படைப்பாளரான பரிசுத்தரிடம் உண்மையான மனந்திரும்புதலுடன் தங்களுடைய பாவங்களை தங்களின் சிருஷ்டி கர்த்தரான தேவனிடம் ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பைப் பெற்று, அதற்கு பிறகு அவர்களுடைய பழைய நிலை மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறை முழுவதும் உலகத்திற்கு எதிராக இருக்க வேண்டும். “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:40). இதற்கு முன்பு பாவம் செய்வதற்கு ஓடியவர்கள், மனமாற்றம் அடைந்த பிறகு, அந்த பாவத்தை வெறுத்து தள்ளிவிட்டு ஓடுவார்கள். இதற்கு முன்பு பேசிய தகாத வார்த்தைகளை பேச மாட்டார்கள். இதற்கு முன்பிருந்த தீய எண்ணங்கள் இனி அவகளுக்கு இருக்காது. இதற்கு முன்பு செய்துவந்த தங்கள் மாம்சத்தின்படியான, விருப்பத்தின்படியான காரியங்களை இனி செய்ய மாட்டார்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்தின் படியான ஒரு புதிய வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள், பரிசுத்தத்தை நேசிப்பவர்களாகவும், தேவனுடைய வசனத்தின் படியான ஒரு புதிய மனதைக் கொண்டவர்களாகவும் இருபார்கள். இதுவே உண்மையான மனமாற்றம் என்பதை நாம் வேத வசனத்திலிருந்து அறியலாம். (நெகேமியா. 9:35). இந்த மனமாற்றம் ஒவொரு கிறிஸ்தவனுக்கு உறுதியான அடையாளம் என்று நாம் (மத்தேயு 3:2, 4:17, 11:20), (மாற்கு 1:4,15 6:12), (லூக்கா 3:8, 5:32, 13:3,5; 15:10), (அப்போஸ்தலர் 2:38, 3:20, 17:30, 20:21) ஆகிய வசனப்பகுதியில் நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும். இதுப்போன்ற உண்மையான மனமாற்றத்தின் அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? என்பதை சோதித்து அறியுங்கள்.

4. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்கள்.

'சுவிசேஷம்' என்ற வார்த்தையை ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் "இயேசுகிறிஸ்து" என்று வரையறுக்கலாம். “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,” இதுவே சுவிசேஷசம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் (1 கொரிந்தியர் 15:1-5) வசனத்தில் சொல்லுகிறார். பரிசுத்தர், நியாதிபதி சிருஷ்டி கர்த்தரான தேவன் மனிதர்களை அவரது சாயலில் படைத்தாலும், அவர்கள் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்து பாவம் செய்ததினால் சபிக்கப்பட்டனர் என்று ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களில் பார்க்கிறோம். அப்போதிலிருந்து மனிதர்கள் தாயின் கர்பத்தில் உருவாகும்போதே பாவ சுபாவம் இருப்பதால், தேவனுடைய கோபத்திற்கு ஆளானார்கள்.

அந்த உன்னதமான தேவனின் நீதியான தண்டனையிலிருந்து காப்பாற்றவும், மனுகுலத்தை தேவனுடன் மீண்டும் இணைக்கும் படியான எந்த வழியுமில்லை, எந்த நபருமில்லை. இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில், தேவனே தன்னுடைய நேசகுமரான இயேசு கிறிஸ்துவை நமக்காக அனுப்பினார், இயேசுகிறிஸ்து நம்முடைய எல்லா பாவங்களையும் தானே ஏற்றுக்கொண்டு, சிலுவை மரணத்தின் மூலம் தேவனின் கோபத்தை தீர்த்து, தம்முடைய நீதியை நமக்குக் கொடுத்து, அவருடைய உயிர்த்தெழுதலினால் பாவத்தின் மூலமாக வந்த மரணத்தை தோற்கடித்து, மேலும் தன்னை விசுவாசிக்கும் அனைவரையும் மீண்டும் தனது பரிசுத்த குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தை ஏற்பாடு செய்தார். அவர் தனது பரிபூரண ஞானத்தின்படி, தக்க சமயத்தில் அதை நிறைவேற்றினார். “தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்”! இதை முழு மனதுடன் விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை உணர்ந்து, அவரை மட்டுமே இரட்சகராகவும், கர்த்தராகவும் முழு மனதுடன் விசுவாசித்து, அவரை மட்டும் சார்ந்திருப்பதே! கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும். இந்த சுவிஷேசத்தின் மீதும், கிறிஸ்துவின் மீதும் உறுதியான விசுவாசம், உங்களுடைய இதயத்தில் உண்மையாகவே இருக்கிறதா?

5. வசனத்திற்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள்.

இயேசு கிறிஸ்துவை பற்றிய சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் போது, ​​பரிசுத்த ஆவியானவரால் மறுபிறப்பு அடைந்தவர்கள் பாவ மன்னிப்புக்காக தங்களின், பாவங்களுக்காக மனம்வருந்தி புதிய இருதயத்தை உடையவர்களாக இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபிறகு தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, ஒரு உள்ளூர் திருச்சபையில் முறையாக, ஞானஸ்நானம் பெற வேண்டும் (லூக்கா 3:3), (அப்போஸ்தலர் 2:38,41 8:12, 10;48). நான் இனிமேல் கிறிஸ்துவுக்கு சொந்தமானவன் என்று பகிரங்கமாக திருச்சபைக்கும், சமுதிற்க்கும் முன்பாக சாட்சி கொடுப்பதே ஞானஸ்நானம். மனதளவில் நடந்த மாற்றத்திற்கு வெளிப்படையான அடையாளம் தான் ஞானஸ்நானம்.

முழுக்கு ஞானஸ்நானம் என்பது ஏன் பாவத்திற்காக கிறிஸ்துவுடனே கூட மரித்து, அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாக நித்திய ஜீவனைப் பெறுகிறேன் என்பதற்கான அடையாளப் பிரகடனம். கிறிஸ்துவின் சீஷனாகயிருக்கும் ஒவ்வொரு நபரும் முழுக்கு ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் தெளிவாக போதித்தனர். (மாற்கு 16:16), (லூக்கா 3:3), (அப்போஸ்தலர் 2:38, 8:12, 10:48, 22:16). ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஞானஸ்நானம் பெற வேண்டும், என சொல்லுவது தேவனுடைய வார்த்தையின் கட்டளை. என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் மனந்திரும்புதல், மனமாற்றம் மற்றும் விசுவாசம் இல்லாமல் தண்ணீரில் மூழ்குவது ஞானஸ்நானம் அல்ல, அப்படிப்பட்ட ஞானஸ்நானம் நம்மை இரட்சிகாது. ஒருவன் உண்மையாகவே மறுபிறப்பு அடைந்தவன், தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புவார்கள், இயேசு கிறிஸ்துவை விசுவாசிபார்கள், ஞானஸ்நானம் பெறுவார்கள்.

முடிவுரை.

திருச்சபையின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் போது, ​​இரட்சிப்புக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அந்த சுவிஷேசத்தினால் உணரப்பட்டு கிறிஸ்தவத்திற்குள், அதாவது கிறிஸ்துவின் சீஷராக வழிநடத்தப் படுவான். இவ்வாறு தொடங்கப்பட்ட கிறிஸ்தவப் பயணம், சரியாகவும், ஒழுங்காகவும், உறுதியாகவும், திறம்படவும், மற்றும் தேவனுடைய சித்தத்தின்படியும் தேவனுடைய மகிமைக்காகவும் நித்தியத்தை நோக்கியே திருச்சபையால் வழிநடத்தப்படுவார்கள், அத்தகைய கிறிஸ்தவர்களின் ஐக்கியமே திருச்சபையாகும். நாளுக்கு நாள் கிறிஸ்துவின் சாயலாகவும், அவருடைய சிஷர்களாகவும் மாறுவதே திருச்சபையின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதே தேவனின் பிரதான கட்டளை, (மத்தேயு 28:18-20). இப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்றும், சபை என்றும் அழைக்க வேண்டும். இந்த குணாதிசயங்கள் இல்லாமல், பெயராய் மட்டும் வைத்துக்கொள்வதினால் மட்டுமே அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்ல முடியாது. அது தேவனின் திருச்சபை அல்ல.

தேவன் நம்மை உண்மையான கிறிஸ்தவர்களாகவும், உண்மையான திருச்சபையாகவும் ஆக்குவாராக!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.