புத்தகங்கள்

புத்தகங்கள்

அந்நியபாஷை குழப்பமும், தெளிவும்

பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷையைக் குறித்து இன்று பலருக்கும் பலவிதமான கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. இந்த வரம் எல்லோருக்கும் உரியதா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரியதா? இது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் அடையாளமா? அன்னியபாஷை பேசுபவர்கள் மட்டுமே பரலோகம் செல்ல முடியுமா? அந்நியபாஷை பேசாதவர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா? இல்லையா? போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.

இதுகுறித்து ஒரு தெளிவைப்பெற எந்த ஒரு செய்தியையோ விளக்கத்தையும் நாம் கேட்டாலும், அது ஆளுக்கு ஆள், ஊழியருக்கு ஊழியர் கொடுக்கும் விளக்கங்களும் வேறுபடுகின்றன. ஆகவே, வேத புத்தகத்தில் தேவன் அந்த வரத்தை கொடுத்ததன் நோக்கம் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.

ஆகவே, முழு வேத புத்தகத்திலும் அந்நியபாஷை குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து, எல்லா வசனங்களும் பொருந்திவரும் வகையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். அந்நியபாஷையின் வரம் என்றால் என்ன? இன்று பேசப்படும் அந்நியபாஷை உண்மையா? பொய்யா? அதை எப்படி/எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையான தேடலுடன், அதைப்பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வாஞ்சிக்கும் எந்த ஒரு விசுவாசிக்கும், இந்த புத்தகம் நிச்சயம் உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு, ஜான் மெக் ஆர்தர் (John MacArthur) அவர்களின் வேத ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தப் புத்தகத்தில் உள்ள விளக்கங்கள் அவரது வேத ஆராய்ச்சியை ஒட்டியே அமைந்திருக்கும். இந்த புத்தகத்தின் மூலம் அந்நியபாஷையைக் குறித்த ஒரு தெளிவைப்பெற பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக.

ஆசிரியர்: முனைவர். கோ. லூக்கா கண்ணன்

PFW tamil

தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

வேதத்தை வாசிப்பதிலிருந்து நாம் எந்த அளவிற்கு ஆதாயம்பெறுகிறோம்? 2தீமோத்தேயு 3:16, 17 வசனங்களில், 'வேதவாக்கியங்களெல்லாம்' நமக்குப் 'பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது' என்று சொல்லப்படிருக்கிறது. ஆனால் நம்முடைய வேத வாசிப்பிலிருந்து எந்த அளவிளவிற்கு நாம் ஆதாயம் பெறுகிறோம்? இன்னும் அதிகமாக நாம் ஆதாயம் பெறுவதெப்படி? கிறிஸ்தவ அனுபவத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இந்தக் கேள்விகள் அடிப்படையானவை, பிங்க் அவர்கள் எழுதிய இந்தப் புத்தகத்திற்கும் தலைப்பை இக்கேள்விகள் தருகின்றன. அவர் எழுதியப் பல புத்தகங்களில் இந்தப் புத்தகம் மிகச் சிறந்தது, நிச்சயமாகக் கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிரயோஜனப்படக்கூடியது. புத்தகத்தைப் படிக்க...

இப்புத்தகம் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அச்சுவடிவிலும் தயாராக உள்ளது. விலை ரூ. 60/- (அஞ்சல் வழியாக பெற ரூ.25 கூடுதல்). புத்தகம் தேவைப்படின் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2)

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தவறான வழிமுறைகள் என்ன? சரியான வழிமுறைகள் என்ன? தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தம் என்றால் என்ன என்பதை விளக்கி, ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துக்கொள்ளுவது என்பதை விளக்கும் சிறந்த புத்தகம். புத்தகத்தைப் படிக்க...

தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

அத்தேனே பட்டணத்தில் பவுல்

அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17)

அத்தேனே பட்டணத்தில் பவுல் கண்ட காட்சிகள் எவ்விதத்தில் அவரை பாதித்தது, அதிலிருந்து கிறிஸ்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ன? என்பதை விளக்கும் சிறந்த புத்தகம்.

இது ஜெ.சி. ரைல் (J.C. Ryle) அவர்கள் எழுதிய "Paul in Athens" என்ற ஆங்கில செய்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. புத்தகத்தைப் படிக்க... 

தமிழாக்கம்: திரு.கோ.கண்ணன்

அந்நியபாஷை குழப்பம்

பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களும், தமிழக போலி கிறிஸ்தவத் தொலைக்காட்சி கிறிஸ்தவர்களும் போலியான அந்நியபாஷைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஏன் இந்த பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை போலியானது என்பதை வசன ஆதாரங்களுடன் விளக்கும் ஜாமக்காரன் புஷ்பராஜ் அவர்களின் புத்தகம்.

புத்தகத்தை படித்து தெளிவுபெற்று போலியான அந்நியபாஷையை விட்டு, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ கிறிஸ்தவர்களை அழைக்கிறோம். புத்தகத்தை படிக்க...
ஆசிரியர்: Dr.புஷ்பராஜ் (ஜாமக்காரன்)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.