1 | விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. | ஆதி 2:4 ஆதி 1:1 ஆதி 1:10 யாத் 20:11 யாத் 31:17 2இரா 19:15 2நாளா 2:12 நெகே 9:6 யோபு 12:9 சங் 89:11-13 சங் 104:2 சங் 136:5-8 சங் 146:6 ஏசா 42:5 ஏசா 45:18 ஏசா 48:13 ஏசா 55:9 ஏசா 65:17 எரே 10:12 எரே 10:16 சகரி 12:1 அப் 4:24 எபிரெ 4:3 |
2 | மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார்.அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். | ஆதி 1:31 யாத் 20:11 யாத் 23:12 யாத் 31:17 உபா 5:14 ஏசா 58:13 யோவா 5:17 எபிரெ 4:4 |
3 | கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார்.ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். | யாத் 16:22-30 யாத் 20:8-11 யாத் 23:12 யாத் 31:13-17 யாத் 34:21 யாத் 35:2 யாத் 35:3 லேவி 23:3 லேவி 25:2 லேவி 25:3 உபா 5:12-14 நெகே 9:14 நெகே 13:15-22 நீதி 10:22 ஏசா 56:2-7 ஏசா 58:13 ஏசா 58:14 எரே 17:21-27 எசே 20:12 மாற் 2:27 லூக் 23:56 எபிரெ 4:4-10 |
4 | இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம். ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது, | ஆதி 1:4 ஆதி 5:1 ஆதி 10:1 ஆதி 11:10 ஆதி 25:12 ஆதி 25:19 ஆதி 36:1 ஆதி 36:9 யாத் 6:16 யோபு 38:28 சங் 90:1 சங் 90:2 |
5 | மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை: வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை: ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை: மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை. | ஆதி 1:12 சங் 104:14 |
6 | ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது. |
7 | அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். | சங் 100:3 சங் 139:14 சங் 139:15 ஏசா 64:8 |
8 | ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். | ஆதி 13:10 எசே 28:13 எசே 31:8 எசே 31:9 யோவே 2:3 |
9 | ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். | எசே 31:8 எசே 31:9 எசே 31:16 எசே 31:18 |
10 | தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று. | சங் 46:4 வெளிப் 22:1 |
11 | முதலாவதன் பெயர் பீசோன்.இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது.அங்கே பொன் விளையும். | ஆதி 10:7 ஆதி 10:29 ஆதி 25:18 1சாமு 15:7 |
12 | அந்நாட்டுப் பொன் பசும்பொன்.அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு. | எண் 11:7 |
13 | இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன்.இது எத்தியோப்பியா நாடு முழவதும் வளைந்து ஓடுகின்றது. | ஆதி 10:6 ஏசா 11:11 |
14 | மூன்றாவது ஆற்றின் பெயர் திக்ரீசு.இது அசீரியாவிற்குக் கிழக்கே, ஓடுகின்றது.நான்காவது ஆறு யூப்பிரத்தீசு. | தானி 10:4 |
15 | ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். | ஆதி 2:2 யோபு 31:33 |
16 | ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். | 1சாமு 15:22 |
17 | ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார். | ஆதி 2:9 ஆதி 3:1-3 ஆதி 3:11-3 ஆதி 3:17-3 ஆதி 3:19-3 |
18 | பின்பு ஆண்டவராகிய கடவுள்,“மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார். | ஆதி 1:31 ஆதி 3:12 ரூத் 3:1 நீதி 18:22 பிரச 4:9-12 1கொரி 7:36 |
19 | ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. | ஆதி 1:20-25 |
20 | கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்: தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை. |
21 | ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். | ஆதி 15:12 1சாமு 26:12 யோபு 4:13 யோபு 33:15 நீதி 19:15 தானி 8:18 |
22 | ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். | சங் 127:1 1தீமோ 2:13 |
23 | அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்: ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். | ஆதி 29:14 நியா 9:2 2சாமு 5:1 2சாமு 19:13 எபே 5:30 |
24 | இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்: இருவரும் ஒரே உடலாய் இருப்பர். | ஆதி 24:58 ஆதி 24:59 ஆதி 31:14 ஆதி 31:15 சங் 45:10 |
25 | மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர்.ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை. | ஆதி 3:7 ஆதி 3:10 ஆதி 3:11 |