22
ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர்.கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
23
அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்: ஆண்டவரின் புனிதமானசாபத்து.எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள்.வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்: எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
24
மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை: புழு வைக்கவும் இல்லை.
25
மோசே அவர்களிடம், “இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்: இன்று ஆண்டவரின் ஓய்வுநாள்.எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.
26
ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்: ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார்.
27
ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர்.ஆனால் எதையும் காணவில்லை.
28
ஆண்டவர் மோசேயை நோக்கி, “எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?
29
கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார்.அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார்.எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்: ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது” என்றார்.
30
ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.