இணை வசன வேதாகமம்

ஆதியாகமம் 8

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.ஆதி 19:29 ஆதி 30:22 யாத் 2:24 1சாமு 1:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:29 நெகே 13:31 யோபு 14:13 சங் 106:4 சங் 132:1 சங் 136:23 சங் 137:7 ஆமோ 8:7 ஆபகூ 3:2 வெளிப் 16:19 வெளிப் 18:5
2ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.ஆதி 7:11 நீதி 8:28 யோனா 2:3
3ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.ஆதி 7:11 ஆதி 7:24
4ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.ஆதி 7:17-19
5பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.ஆதி 7:11
6நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,ஆதி 6:16 தானி 6:10
7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.லேவி 11:15 1இரா 17:4 1இரா 17:6 யோபு 38:41 சங் 147:9
8பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.ஆதி 8:10-12 உன்ன 1:15 உன்ன 2:11 உன்ன 2:12 உன்ன 2:14 மத் 10:16
9பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.உபா 28:65 எசே 7:16 மத் 11:28 யோவா 16:33
10பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.சங் 40:1 ஏசா 8:17 ஏசா 26:8 ரோம 8:25
11அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.நெகே 8:15 சகரி 4:12-14 ரோம 10:15
12பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை.சங் 27:14 சங் 130:5 சங் 130:6 ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 30:18 ஆபகூ 2:3 யாக் 5:7 யாக் 5:8
13அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.ஆதி 7:11
14இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.ஆதி 7:11 ஆதி 7:13 ஆதி 7:14
15அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
16நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.ஆதி 7:1 ஆதி 7:7 ஆதி 7:13 யோசு 3:17 யோசு 4:10 யோசு 4:16-18 சங் 91:11 சங் 121:8 தானி 9:25 தானி 9:26 சகரி 9:11 அப் 16:27 அப் 16:28 அப் 16:37-39
17உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.ஆதி 7:14 ஆதி 7:15
18அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.சங் 121:8
19பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
20அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.ஆதி 4:4 ஆதி 12:7 ஆதி 12:8 ஆதி 13:4 ஆதி 22:9 ஆதி 26:25 ஆதி 33:20 ஆதி 35:1 ஆதி 35:7 யாத் 20:24 யாத் 20:25 யாத் 24:4-8 ரோம 12:1 எபிரெ 13:10 எபிரெ 13:15 எபிரெ 13:16 1பேது 2:5 1பேது 2:9
21சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.லேவி 1:9 லேவி 1:13 லேவி 1:17 லேவி 26:31 உன்ன 4:10 உன்ன 4:11 ஏசா 65:6 எசே 20:41 ஆமோ 5:21 ஆமோ 5:22 2கொரி 2:15 எபே 5:2 பிலிப் 4:18
22பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.ஏசா 54:8

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.