இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,யாத் 6:14-16 ஆதி 29:31-35 ஆதி 30:1-21 ஆதி 35:18 ஆதி 35:23-26 ஆதி 46:8-26 ஆதி 49:3-27 1நாளா 2:1 1நாளா 2:2 1நாளா 12:23-40 1நாளா 27:16-22 வெளிப் 7:4-8
2இசக்கார், செபுலோன், பென்யமீன்,ஆதி 35:22
3தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.ஆதி 35:23
4இவர்கள் யாக்கோபுடனே தங்கள்தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.
5யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.ஆதி 46:26 நியா 8:30
6யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.ஆதி 50:24 ஆதி 50:26 அப் 7:14-16
7இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.யாத் 12:37 ஆதி 1:20 ஆதி 1:28 ஆதி 9:1 ஆதி 12:2 ஆதி 13:16 ஆதி 15:5 ஆதி 17:4-6 ஆதி 17:16-6 ஆதி 22:17 ஆதி 26:4 ஆதி 28:3 ஆதி 28:4 ஆதி 28:14 ஆதி 35:11 ஆதி 46:3 ஆதி 47:27 ஆதி 48:4 ஆதி 48:16 உபா 10:22 உபா 26:5 நெகே 9:23 சங் 105:24 அப் 7:17 அப் 7:18
8யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.பிரச 2:18 பிரச 2:19 பிரச 9:15 அப் 7:18
9அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.எண் 22:4 எண் 22:5 யோபு 5:2 சங் 105:24 சங் 105:25 நீதி 14:28 நீதி 27:4 பிரச 4:4 தீத் 3:3 யாக் 3:14-16 யாக் 4:5
10அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம்பண்ணவேண்டும் என்றான்.சங் 10:2 சங் 83:3 சங் 83:4 நீதி 1:11
11அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.யாத் 3:7 யாத் 5:15 ஆதி 15:13 எண் 20:15 உபா 26:6
12ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.சங் 105:24 நீதி 21:30 ரோம 8:28 எபிரெ 12:6-11
13எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.
14சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.யாத் 2:23 யாத் 6:9 ஆதி 15:13 எண் 20:15 உபா 4:20 உபா 26:6 ரூத் 1:20 அப் 7:19 அப் 7:34
15அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:
16நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.யாத் 1:22 மத் 21:38 வெளிப் 12:4
17மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.ஆதி 20:11 ஆதி 42:18 நெகே 5:15 சங் 31:19 நீதி 8:13 நீதி 16:6 நீதி 24:11 நீதி 24:12 பிரச 8:12 பிரச 12:13 தானி 3:16-18 தானி 6:13 ஓசி 5:11 மீகா 6:16 மத் 10:28 லூக் 12:5 அப் 4:19 அப் 5:29
18அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.2சாமு 13:28 பிரச 8:4
19அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.யோசு 2:4-24 1சாமு 21:2 2சாமு 17:19 2சாமு 17:20
20இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.சங் 41:1 சங் 41:2 சங் 61:5 சங் 85:9 சங் 103:11 சங் 111:5 சங் 145:19 நீதி 11:18 நீதி 19:17 பிரச 8:12 ஏசா 3:10 மத் 10:42 மத் 25:40 லூக் 1:50 எபிரெ 6:10
21மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.1சாமு 2:35 1சாமு 25:28 2சாமு 7:11-13 2சாமு 7:27-29 1இரா 2:24 1இரா 11:38 சங் 37:3 சங் 127:1 சங் 127:3 நீதி 24:3 பிரச 8:12 எரே 35:2
22அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.யாத் 1:16 யாத் 7:19-21 சங் 105:25 நீதி 1:16 நீதி 4:16 நீதி 27:4 அப் 7:19 வெளிப் 16:4-6

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.