1 | எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். |
2 | ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்: நெடுங்காலம் வாழவைப்பார்: நாட்டில் பேறுபெற்றவராய் விளறங்கச் செய்வார்: எதிரிகளின் விருப்பத்திற்கு அரைக் கையளிக்க மாட்டார். |
3 | படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்: நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார். |
4 | 'ஆண்டவரே, எனக்கு இரங்கும்: என்னைக் குணப்படுத்தும்: உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்' என்று மன்றாடினேன். |
5 | என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, 'அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்' என்கின்றனர். |
6 | ஒருவன் என்னைப் பார்க்கவந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்: என்னைப்பற்றிய தவறான செய்திகளை சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான். |
7 | என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர். |
8 | 'தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது: படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்' என்று சொல்கின்றனர். |
9 | என் உற்ற நணபன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான். |
10 | ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். |
11 | என் எதிரி என்னை வென்ற ஆர்ப்பரிக்கப் போவதில்லை: இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன். |
12 | நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்: நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்: உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். |
13 | இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக! ஆமென்! ஆமென்! |