வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 142

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்: உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.
2என் மனக்குறைகளை அவர் முன்னலையில் கொட்டுகின்றேன்: அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்:
3என் மனம் சோர்வுற்றிருந்தது: நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்: நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
4வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்: என்னைக் கவனிப்பார் எவருமிலர்: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று: என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.
5ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: 'நீரே என் அடைக்கலம்: உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.
6என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்: ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்: என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்: ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.
7சிறையினின்று என்னை விடுவித்தருளும்: உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்: ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.