1 | அடிமைத்தளையில் இருப்போர் தங்கள் தலைவர்களை முழு மதிப்புக்கு உரியவர்களாகக் கருதவேண்டும். அப்பொழுது கடவுளின் பெயரும் போதனையும் பழிச்சொல்லுக்கு உள்ளாகாது. | உபா 28:48 ஏசா 47:6 ஏசா 58:6 மத் 11:9 மத் 11:30 அப் 15:10 1கொரி 7:21 1கொரி 7:22 கலா 5:1 |
2 | நம்பிக்கை கொண்டோரைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள், அவர்களும் சகோதரர்கள்தானே என்று, மதிப்புக் கொடுக்காதிருத்தல் தவறு. மாறாகத் தங்கள் நற்செயலால் பயன்பெறுவோர் நம்பிக்கை கொண்டவர்களும் அன்பர்களுமாய் இருப்பதால், இன்னும் மிகுதியாக அவர்களுக்குப் பணி செய்யவேண்டும். இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. | கொலோ 4:1 பிலேமோ 1:10-16 |
3 | மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம்தரும் வார்த்தைகளுக்கும், இறைப்பற்றுக்குரிய போதனைக்கும் ஒத்துப் போகாதவர்கள், | 1தீமோ 1:3 1தீமோ 1:6 ரோம 16:17 கலா 1:6 கலா 1:7 |
4 | தற்பெருமை கொண்டவர்கள்: ஒன்றும் தெரியாதவர்கள்: விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், | 1தீமோ 1:7 1தீமோ 3:6 நீதி 13:7 நீதி 25:14 நீதி 26:12 அப் 8:9 அப் 8:21-23 ரோம 12:16 1கொரி 3:18 1கொரி 8:1 1கொரி 8:2 கலா 6:3 கொலோ 2:18 2தெச 2:4 2தீமோ 3:4 2பேது 2:12 2பேது 2:18 யூதா 1:10 யூதா 1:16 வெளிப் 3:17 |
5 | ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன. | 1தீமோ 1:6 1கொரி 11:16 |
6 | இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்: ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். | 1தீமோ 4:8 சங் 37:16 சங் 84:11 நீதி 3:13-18 நீதி 8:18-21 நீதி 15:16 நீதி 16:8 மத் 6:32 மத் 6:33 லூக் 12:31 லூக் 12:32 ரோம 5:3-5 ரோம 8:28 2கொரி 4:17 2கொரி 4:18 2கொரி 5:1 பிலிப் 1:21 எபிரெ 13:5 |
7 | உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. | யோபு 1:21 நீதி 27:24 பிரச 5:15 பிரச 5:16 |
8 | எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். | ஆதி 28:20 ஆதி 48:15 உபா 2:7 உபா 8:3 உபா 8:4 நீதி 27:23-27 நீதி 30:8 நீதி 30:9 பிரச 2:24-26 பிரச 3:12 பிரச 3:13 மத் 6:11 மத் 6:25-33 எபிரெ 13:5 எபிரெ 13:6 |
9 | செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்: அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. | ஆதி 13:10-13 எண் 22:17-19 யோசு 7:11 2இரா 5:20-27 நீதி 15:27 நீதி 20:21 நீதி 21:6 நீதி 22:16 நீதி 28:20-22 ஏசா 5:8 ஓசி 12:7 ஓசி 12:8 ஆமோ 8:4-6 சகரி 11:5 மத் 13:22 மத் 19:22 மத் 26:15 யாக் 5:1-4 2பேது 2:15 2பேது 2:16 யூதா 1:11 |
10 | பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். | ஆதி 34:23 ஆதி 34:24 ஆதி 38:16 யாத் 23:7 யாத் 23:8 உபா 16:19 உபா 23:4 உபா 23:5 உபா 23:18 நியா 17:10 நியா 17:11 நியா 18:19 நியா 18:20 நியா 18:29-31 2சாமு 4:10 2சாமு 4:11 நீதி 1:19 ஏசா 1:23 ஏசா 56:11 எரே 5:27 எரே 5:28 எசே 13:19 எசே 16:33 எசே 22:12 மீகா 3:11 மீகா 7:3 மீகா 7:4 மல்கி 1:10 மத் 23:14 அப் 1:16-19 தீத் 1:11 வெளிப் 18:13 |
11 | கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு. | 2தீமோ 2:22 |
12 | விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக் கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய். | 1தீமோ 1:18 சகரி 10:5 1கொரி 9:25 1கொரி 9:26 2கொரி 6:7 2கொரி 10:3-5 எபே 6:10-18 1தெச 5:8 1தெச 5:9 2தீமோ 4:7 |
13 | அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின்முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். | 1தீமோ 5:21 |
14 | நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. | 1தீமோ 6:20 1தீமோ 4:11-16 1நாளா 28:9 1நாளா 28:10 1நாளா 28:20 கொலோ 4:17 |
15 | உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். | 1தீமோ 1:11 1தீமோ 1:17 சங் 47:2 சங் 83:18 எரே 10:10 எரே 46:18 தானி 2:44-47 தானி 4:34 மத் 6:13 |
16 | அவர் ஒருவரே சாவை அறியாதவர்: அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்: அவரைக் கண்டவர் எவருமிலர்: காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென். | 1தீமோ 1:17 யாத் 3:14 உபா 32:40 சங் 90:2 ஏசா 57:15 யோவா 8:58 எபிரெ 13:8 வெளிப் 1:8 வெளிப் 1:17 வெளிப் 1:18 |
17 | இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு: அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும். | 1தீமோ 6:13 1தீமோ 1:3 1தீமோ 5:21 |
18 | அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக: தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. | 2நாளா 24:16 சங் 37:3 பிரச 3:12 லூக் 6:33-35 அப் 10:38 கலா 6:10 எபிரெ 13:16 1பேது 3:11 3யோவா 1:11 |
19 | இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும். | சங் 17:14 மத் 6:19-21 மத் 10:41 மத் 10:42 மத் 19:21 மத் 25:34-40 லூக் 12:33 லூக் 16:9 லூக் 18:2 லூக் 18:22 கலா 6:8 கலா 6:9 |
20 | திமொத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பாயாக. உலகப் போக்கிலான வீண்பேச்சுகளிருந்தும், ஞானம் எனத் தவறாகப் பெயர் பெற்றிருக்கும் முரண்பாடான கருத்துகளிலிருந்தும் விலகியிரு. | 1தீமோ 6:11 2தீமோ 2:1 |
21 | அந்த ஞானத்தைப் பெற்றிருப்பதாகக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தை விட்டு விலகினார்கள். இறை அருள் உங்களோடிருப்பதாக! | 1தீமோ 6:10 1தீமோ 1:6 1தீமோ 1:19 2தீமோ 2:18 எபிரெ 10:1-12 |