1நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது:2கொரி 1:19 1தெச 1:1-10 2நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!ரோம 1:7 1கொரி 1:3 1கொரி 1:8 3சகோதர சகோதரிகளே! உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே. ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது: நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.2தெச 2:13 ரோம 1:8 1கொரி 1:4 1தெச 1:2 1தெச 1:3 1தெச 3:6 1தெச 3:9 4ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்: உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும் நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.2கொரி 7:14 2கொரி 9:2 2கொரி 9:4 1தெச 2:19 5இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன. இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள். இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.2தெச 1:6 பிலிப் 1:28 1பேது 4:14-18 6ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும் துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும் எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றே!உபா 32:41-43 சங் 74:22 சங் 74:23 சங் 79:10-12 சங் 94:20-23 ஏசா 49:26 சகரி 2:8 வெளிப் 6:10 வெளிப் 11:18 வெளிப் 15:4 வெளிப் 16:5 வெளிப் 16:6 வெளிப் 18:20 வெளிப் 18:24 வெளிப் 19:2 7நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.ஏசா 57:2 மத் 5:10-12 லூக் 16:25 ரோம 8:17 2கொரி 4:17 2தீமோ 2:12 எபிரெ 4:1 எபிரெ 4:9 எபிரெ 4:11 1பேது 4:1 வெளிப் 7:14-17 வெளிப் 14:13 வெளிப் 21:4 8அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.ஆதி 3:24 உபா 4:11 உபா 5:5 சங் 21:8 சங் 21:9 சங் 50:2-6 தானி 7:10 மத் 25:41 மத் 25:46 எபிரெ 10:27 எபிரெ 12:29 2பேது 3:7 2பேது 3:10-12 வெளிப் 20:10 வெளிப் 20:14 வெளிப் 20:15 வெளிப் 21:8 9இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.ஏசா 33:14 ஏசா 66:24 தானி 12:2 மத் 25:41 மத் 25:46 மத் 26:24 மாற் 9:43-49 லூக் 16:25 லூக் 16:26 யோவா 5:14 பிலிப் 3:19 எபிரெ 10:29 2பேது 2:17 2பேது 3:7 யூதா 1:13 வெளிப் 14:10 வெளிப் 14:11 வெளிப் 20:14 வெளிப் 21:8 வெளிப் 22:15 10அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்: நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்.2தெச 1:12 எண் 23:23 சங் 89:7 ஏசா 43:21 ஏசா 44:23 ஏசா 49:3 ஏசா 60:21 எரே 33:9 மத் 25:31 யோவா 11:4 யோவா 17:10 கலா 1:24 எபே 1:6 எபே 1:12 எபே 1:14 எபே 1:18 எபே 2:7 எபே 3:10 எபே 3:16 1பேது 2:9 வெளிப் 7:11 வெளிப் 7:12 11இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!ரோம 1:9 எபே 1:16 எபே 3:14-21 பிலிப் 1:9-11 கொலோ 1:9-13 1தெச 3:9-13 12இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!2தெச 1:10 யோவா 17:10 1பேது 4:14