1தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!அப் 15:27 அப் 15:32 அப் 15:34 அப் 15:40 அப் 16:19 அப் 16:25 அப் 16:29 அப் 17:4 அப் 17:15 அப் 18:5 2நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.ரோம 1:8 ரோம 1:9 ரோம 6:17 1கொரி 1:4 எபே 1:15 எபே 1:16 பிலிப் 1:3 பிலிப் 1:4 கொலோ 1:3 பிலேமோ 1:4 3செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூறுகிறோம்.1தெச 3:6 2தீமோ 1:3-5 4கடவுளின் அன்புக்குரி சகோதர சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.1தெச 1:3 ரோம 8:28-30 ரோம 11:5-7 எபே 1:4 பிலிப் 1:6 பிலிப் 1:7 1பேது 1:2 2பேது 1:10 5ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.ஏசா 55:11 ரோம 2:16 2கொரி 4:3 கலா 1:8-12 கலா 2:2 2தெச 2:14 2தீமோ 2:8 6மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள்.1தெச 2:14 1கொரி 4:16 1கொரி 11:1 2கொரி 8:5 பிலிப் 3:17 2தெச 3:9 7மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள்.1தெச 4:10 1தீமோ 4:12 தீத் 2:7 1பேது 5:3 8எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது. எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏசா 2:3 ஏசா 52:7 ஏசா 66:19 ரோம 10:14-18 1கொரி 14:36 2தெச 3:1 வெளிப் 14:6 வெளிப் 22:17 9நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.1தெச 1:5 1தெச 1:6 1தெச 2:1 1தெச 2:13 10இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.1தெச 4:16 1தெச 4:17 ஆதி 49:18 யோபு 19:25-27 ஏசா 25:8 ஏசா 25:9 லூக் 2:25 அப் 1:11 அப் 3:21 ரோம 2:7 ரோம 8:23-25 1கொரி 1:7 பிலிப் 3:20 1தெச 1:7 1தெச 2:7 2தீமோ 4:1 தீத் 2:13 எபிரெ 9:28 2பேது 3:12 2பேது 3:14 வெளிப் 1:7