ஆதியாகமம் 13:10-13 - WCV
10
லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார்.சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது.சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது.
11
லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார்.இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.
12
ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார்.லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார்.இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
13
ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.