வேதாகமத்தை வாசி

Click to Subscribe

சங்கீதம் 99

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: மக்களினத்தார் கலங்குவராக! அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்: மண்ணுலகம் நடுநடுங்குவதாக!
2சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்: எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார்.
3மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே தூயவர்.
4வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்: நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்: யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.
5நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: தாள் பணிந்து வணங்குங்கள்: அவரே தூயவர்!
6மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்: அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்: அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
7மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்: அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.
8எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்: மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்: ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர்.
9நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.