1 | அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தனின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள். |
2 | செருபாபேலோடு வந்தவர்கள்: ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை: |
3 | பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர். |
4 | செபத்தியாவின் மக்கள் முன்னூற்று எழுபத்திரண்டு பேர். |
5 | ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர். |
6 | ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர். |
7 | ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். |
8 | சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர். |
9 | சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர். |
10 | பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர். |
11 | பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர். |
12 | அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர். |
13 | அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர். |
14 | பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர். |
15 | அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர். |
16 | எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர். |
17 | பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர். |
18 | யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர். |
19 | ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர். |
20 | கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர். |
21 | பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர். |
22 | நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர். |
23 | அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர். |
24 | அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர். |
25 | கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர். |
26 | இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர். |
27 | மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர். |
28 | பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர். |
29 | நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர். |
30 | மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர். |
31 | மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். |
32 | ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர். |
33 | லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர். |
34 | எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர். |
35 | செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர். |
36 | குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர். |
37 | இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர். |
38 | பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர். |
39 | ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர். |
40 | லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர். |
41 | பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர். |
42 | வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர். |
43 | கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள். |
44 | கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள், |
45 | இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள், |
46 | காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், கானானின் மக்கள், |
47 | கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள், |
48 | இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள், |
49 | ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள், |
50 | அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள், |
51 | பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள், |
52 | பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள், |
53 | பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள், |
54 | நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே! |
55 | சாலமோன் ஊழியரின் மக்கள்: |
56 | சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள், |
57 | செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள். |
58 | கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர். |
59 | மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே: |
60 | தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர். |
61 | மற்றும், குருக்களின் புதல்வர்கள்: அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள். |
62 | இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். |
63 | அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார். |
64 | மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது. |
65 | அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர். |
66 | அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. |
67 | ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. |
68 | குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர். |
69 | அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம் வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள். |
70 | குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள். |