இணை வசன வேதாகமம்

கொலோசேயர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.கொலோ 2:12 கொலோ 2:13 கொலோ 2:20 ரோம 6:4 ரோம 6:5 ரோம 6:9-11 கலா 2:19 கலா 2:20 எபே 1:19 எபே 1:20 எபே 2:5 எபே 2:6
2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.கொலோ 3:1 1நாளா 22:19 1நாளா 29:3 சங் 62:10 சங் 91:14 சங் 119:36 சங் 119:37 நீதி 23:5 பிரச 7:14 மத் 16:23 ரோம 8:4-6 பிலிப் 1:23 1யோவா 2:15-17
3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.கொலோ 2:20 ரோம 6:2 கலா 2:20
4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.யோவா 11:25 யோவா 14:6 யோவா 20:31 அப் 3:15 கலா 2:20 2தீமோ 1:1 1யோவா 1:1 1யோவா 1:2 1யோவா 5:12 வெளிப் 2:7 வெளிப் 22:1 வெளிப் 22:14
5ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.ரோம 6:6 ரோம 8:13 கலா 5:24 எபே 5:3-6
6இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவளின் சினத்தை வரவழைக்கின்றன.ரோம 1:18 எபே 5:6 வெளிப் 22:15
7இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.கொலோ 2:13 ரோம 6:19 ரோம 6:20 ரோம 7:5 1கொரி 6:11 எபே 2:2 தீத் 3:3 1பேது 4:3 1பேது 4:4
8ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள். பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது.கொலோ 3:5 கொலோ 3:9 எபே 4:22 எபிரெ 12:1 யாக் 1:21 1பேது 2:1
9ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு,லேவி 19:11 ஏசா 63:8 எரே 9:3-5 செப் 3:13 சகரி 8:16 யோவா 8:44 எபே 4:25 1தீமோ 1:10 தீத் 1:12 தீத் 1:13 வெளிப் 21:8 வெளிப் 21:27 வெளிப் 22:15
10புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.கொலோ 3:12 கொலோ 3:14 யோபு 29:14 ஏசா 52:1 ஏசா 59:17 ரோம 13:12 ரோம 13:14 1கொரி 15:53 1கொரி 15:54 கலா 3:27 எபே 4:24
11புதப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.சங் 117:2 ஏசா 19:23-25 ஏசா 49:6 ஏசா 52:10 ஏசா 66:18-22 எரே 16:19 ஓசி 2:23 ஆமோ 9:12 மீகா 4:2 சகரி 2:11 சகரி 8:20-23 மல்கி 1:11 மத் 12:18-21 அப் 10:34 அப் 10:35 அப் 13:46-48 அப் 15:17 அப் 26:17 அப் 26:18 ரோம 3:29 ரோம 4:10 ரோம 4:11 ரோம 9:24-26 ரோம 9:30 ரோம 9:31 ரோம 10:12 ரோம 15:9-13 1கொரி 12:13 கலா 3:28 எபே 3:6
12நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.கொலோ 3:10 எபே 4:24
13ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.ரோம 15:1 ரோம 15:2 2கொரி 6:6 கலா 6:2 எபே 4:2 எபே 4:32
14இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.கொலோ 2:2 யோவா 13:34 யோவா 15:12 ரோம 13:8 1கொரி 13:1-13 எபே 5:2 1தெச 4:9 1தீமோ 1:5 1பேது 4:8 2பேது 1:7 1யோவா 3:23 1யோவா 4:21
15கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.சங் 29:11 ஏசா 26:3 ஏசா 27:5 ஏசா 57:15 ஏசா 57:19 யோவா 14:27 யோவா 16:33 ரோம 5:1 ரோம 14:17 ரோம 15:13 2கொரி 5:19-21 எபே 2:12-18 எபே 5:1 பிலிப் 4:7
16கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.யோவா 5:39 யோவா 5:40 2தீமோ 3:15 எபிரெ 4:12 எபிரெ 4:13 1பேது 1:11 1பேது 1:12 வெளிப் 19:10
17எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.கொலோ 3:23 2நாளா 31:20 2நாளா 31:21 நீதி 3:6 ரோம 14:6-8 1கொரி 10:31
18திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்.ஆதி 3:16 எஸ்தர் 1:20 1கொரி 11:3 1கொரி 14:34 எபே 5:22-24 எபே 5:33-24 1தீமோ 2:12 தீத் 2:4 தீத் 2:5 1பேது 3:1-6
19திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்.ஆதி 2:23 ஆதி 2:24 ஆதி 24:67 நீதி 5:18 நீதி 5:19 பிரச 9:9 மல்கி 2:14-16 லூக் 14:26 எபே 5:25 எபே 5:28 எபே 5:29 எபே 5:33 1பேது 3:7
20பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.ஆதி 28:7 யாத் 20:12 லேவி 19:3 உபா 21:18-21 உபா 27:16 நீதி 6:20 நீதி 20:20 நீதி 30:11 நீதி 30:17 எசே 22:7 மல்கி 1:6 மத் 15:4-6 மத் 19:19 எபே 6:1-3
21பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.சங் 103:13 நீதி 3:12 நீதி 4:1-4 எபே 6:4 1தெச 2:11 எபிரெ 12:5-11
22அடிமைகளே, இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு, முற்றிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல், ஆண்டவரக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள்.கொலோ 3:20 சங் 123:2 மல்கி 1:6 மத் 8:9 லூக் 6:46 லூக் 7:8 எபே 6:5-7 1தீமோ 6:1 1தீமோ 6:2 தீத் 2:9 தீத் 2:10 பிலேமோ 1:16 1பேது 2:18 1பேது 2:19
23நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்.கொலோ 3:17 2நாளா 31:21 சங் 47:6 சங் 47:7 சங் 103:1 சங் 119:10 சங் 119:34 சங் 119:145 பிரச 9:10 எரே 3:10 1பேது 1:22
24அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.கொலோ 2:18 ஆதி 15:1 ரூத் 2:12 நீதி 11:18 மத் 5:12 மத் 5:46 மத் 6:1 மத் 6:2 மத் 6:5 மத் 6:16 மத் 10:41 லூக் 6:35 லூக் 14:14 ரோம 2:6 ரோம 2:7 ரோம 4:4 ரோம 4:5 1கொரி 3:8 1கொரி 9:17 1கொரி 9:18 எபே 6:8 எபிரெ 9:15 எபிரெ 10:35 எபிரெ 11:6
25ஏனெனில், ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார்.1கொரி 6:7 1கொரி 6:8 1தெச 4:6 பிலேமோ 1:18

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.