இணை வசன வேதாகமம்

கொலோசேயர் 2

                   
புத்தகங்களைக் காட்டு
1உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.கொலோ 1:24 கொலோ 1:29 கொலோ 4:12 ஆதி 30:8 ஆதி 32:24-30 ஓசி 12:3 ஓசி 12:4 லூக் 22:44 கலா 4:19 பிலிப் 1:30 1தெச 2:2 எபிரெ 5:7
2என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்: அந்த அறிவுத்திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம்.கொலோ 4:8 ஏசா 40:1 ரோம 15:13 2கொரி 1:4-6 1தெச 3:2 1தெச 5:14 2தெச 2:16 2தெச 2:17
3ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.கொலோ 1:9 கொலோ 1:19 கொலோ 3:16 ரோம 11:33 1கொரி 1:24 1கொரி 1:30 1கொரி 2:6-8 எபே 1:8 எபே 3:10 2தீமோ 3:15-17
4திறமையாக வாதாடி எவரும் உங்களை ஏமாற்றிவிடக்கூடாதென்றே நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.கொலோ 2:8 கொலோ 2:18 மத் 24:4 மத் 24:24 மாற் 13:22 அப் 20:30 ரோம 16:18 ரோம 16:19 2கொரி 11:3 2கொரி 11:11-13 கலா 2:4 எபே 4:14 எபே 5:6 2தெச 2:9-11 1தீமோ 4:1 1தீமோ 4:2 2தீமோ 2:16 2தீமோ 3:13 தீத் 1:10 தீத் 1:11 1பேது 2:1-3 1யோவா 2:18 1யோவா 2:26 1யோவா 4:1 2யோவா 1:7 வெளிப் 12:9 வெளிப் 13:8 வெளிப் 20:3 வெளிப் 20:8
5உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும் நான் உள்ளத்தில் உங்களுடன் இருக்கிறேன். உங்களிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் உறுதியான நம்பிக்கையையும் கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.கொலோ 2:1 1கொரி 5:3 1கொரி 5:4 1தெச 2:17
6கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.மத் 10:40 யோவா 1:12 யோவா 1:13 யோவா 13:20 1கொரி 1:30 எபிரெ 3:14 1யோவா 5:11 1யோவா 5:12 1யோவா 5:20 2யோவா 1:8 2யோவா 1:9 யூதா 1:3
7அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்ற மிக்கவர்களாய்த் திகழுங்கள்.கொலோ 1:23 சங் 1:3 சங் 92:13 ஏசா 61:3 எரே 17:8 எசே 17:23 எசே 17:24 ரோம 11:17 ரோம 11:18 எபே 2:21 எபே 2:22 எபே 3:17 யூதா 1:12
8போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல, மனித மரபுகளையும் உலகின் பஞ்சபூதங்களையும் சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள்.உபா 6:12 மத் 7:15 மத் 10:17 மத் 16:6 பிலிப் 3:2 2பேது 3:17
9இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருகில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது.கொலோ 2:2 கொலோ 2:3 கொலோ 1:19 ஏசா 7:14 மத் 1:23 யோவா 10:30 யோவா 10:38 யோவா 14:9 யோவா 14:10 யோவா 14:20 யோவா 17:21 2கொரி 5:19 1தீமோ 3:16 தீத் 2:13 1யோவா 5:7 1யோவா 5:20
10அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும் நிறைவு பெறுகிறீர்கள். ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், அனைவரும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.கொலோ 3:11 யோவா 1:16 1கொரி 1:30 1கொரி 1:31 கலா 3:26-29 எபிரெ 5:9
11நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல: கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம் செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள்.உபா 10:16 உபா 30:6 எரே 4:4 ரோம 2:29 பிலிப் 3:3
12நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.ரோம 6:4 ரோம 6:5
13உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்.எசே 37:1-10 லூக் 9:60 லூக் 15:24 லூக் 15:32 ரோம 6:13 2கொரி 5:14 2கொரி 5:15 எபே 2:1 எபே 2:5 எபே 2:6 எபே 5:14 1தீமோ 5:6 எபிரெ 6:1 எபிரெ 9:14 யாக் 2:17 யாக் 2:20 யாக் 2:26
14நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.எண் 5:23 நெகே 4:5 சங் 51:1 சங் 51:9 ஏசா 43:25 ஏசா 44:22 அப் 3:19
15தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக்கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்.ஆதி 3:15 சங் 68:18 ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 53:12 மத் 12:29 லூக் 10:18 லூக் 11:22 யோவா 12:31 யோவா 16:11 எபே 4:8 எபிரெ 2:14 வெளிப் 12:9 வெளிப் 20:2 வெளிப் 20:3 வெளிப் 20:10
16எனவே உண்பது, குடிப்பது, மற்றும் திருவிழா, அமாவாசை, ஓய்வு நாள் கொண்டாடுவது ஆகியவற்றைக் குறித்து எவரும் உங்களைக் குறைகூற வேண்டியதில்லை.ரோம 14:3 ரோம 14:10 ரோம 14:13 1கொரி 10:28-31 கலா 2:12 கலா 2:13 யாக் 4:11
17இவை எல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே: கிறிஸ்துவே உண்மை.யோவா 1:17 எபிரெ 8:5 எபிரெ 9:9 எபிரெ 10:1
18போலித் தாழ்மையையும் வான தூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள் உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம்கொடாதீர்கள். அவர்கள் தாங்கள் கண்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகப் போக்கிலான சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொள்கிறார்கள்.கொலோ 2:4 கொலோ 2:8 ஆதி 3:13 எண் 25:18 மத் 24:24 ரோம 16:18 2கொரி 11:3 எபே 5:6 2பேது 2:14 1யோவா 2:26 1யோவா 4:1 1யோவா 4:2 2யோவா 1:7-11 வெளிப் 3:11 வெளிப் 12:9 வெளிப் 13:8 வெளிப் 13:14
19அவர்கள் தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்து கொள்ளவில்லை. அவரால்தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது.கொலோ 2:6-9 கொலோ 1:18 கலா 1:6-9 கலா 5:2-4 1தீமோ 2:4-6
20கிறிஸ்துவோடு இறந்து நீங்கள் உலகின் பஞ்சபூதங்களிலிருந்து விடுவிக்கப்பட்டீர்கள் அல்லவா!கொலோ 3:3 ரோம 6:2-11 ரோம 7:4-6 கலா 2:19 கலா 2:20 கலா 6:14 1பேது 4:1-3
21இன்னும் ஏன் “தொடாதே”, “சுவைக்காதே”, “தீண்டாதே” எனச் சொல்லும் உலகப்போக்கிலான விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்?ஆதி 3:3 ஏசா 52:11 2கொரி 6:17 1தீமோ 4:3
22பயன்படுத்தும்போது அழிந்துபோகும் பொருள்கள் பற்றியவை அவ்விதிகள். அவை மனிதர் உருவாக்கின் கட்டளைகளும் போதனைகளுமே.மாற் 7:18 மாற் 7:19 யோவா 6:27 1கொரி 6:13
23மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள், போலித் தாழ்மை, உடல் ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படா.ஆதி 3:5 ஆதி 3:6 மத் 23:27 மத் 23:28 2கொரி 11:13-15 1தீமோ 4:3 1தீமோ 4:8

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.