இணை வசன வேதாகமம்

கலாத்தியர் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1நான் சொல்வது இதுவே: தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை:கலா 4:23 கலா 4:29 ஆதி 24:2 ஆதி 24:3 2இரா 10:1 2இரா 10:2 2இரா 11:12 2இரா 12:2
2தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
3அவ்வாறே, நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகின் பஞ்சபூதங்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம்.கலா 3:19 கலா 3:24 கலா 3:25
4ஆனால் நாலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறுஆதி 49:10 தானி 9:24-26 மல்கி 3:1 மாற் 1:15 அப் 1:7 எபே 1:10 எபிரெ 9:10
5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.கலா 4:21 கலா 3:13 மத் 20:28 லூக் 1:68 அப் 20:28 எபே 1:7 எபே 5:2 கொலோ 1:13-20 தீத் 2:14 எபிரெ 1:3 எபிரெ 9:12 எபிரெ 9:15 1பேது 1:18-20 1பேது 3:18 வெளிப் 5:9 வெளிப் 14:3
6நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி “அப்பா, தந்தையே”, எனக் கூப்பிடுகிறது.லூக் 11:13 யோவா 7:39 யோவா 14:16 ரோம 5:5 ரோம 8:15-17 2கொரி 1:22 எபே 1:13 எபே 4:30
7ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.கலா 4:1 கலா 4:2 கலா 4:5 கலா 4:6 கலா 4:31 கலா 5:1
8ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்: அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்.யாத் 5:2 எரே 10:25 யோவா 1:10 அப் 17:23 அப் 17:30 ரோம 1:28 1கொரி 1:21 எபே 2:11 எபே 2:12 எபே 4:18 1தெச 4:5 2தெச 1:8 1யோவா 3:1
9ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்: உண்மையில், கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்?1இரா 8:43 1நாளா 28:9 சங் 9:10 நீதி 2:5 எரே 31:34 ஆபகூ 2:14 மத் 11:27 யோவா 17:3 1கொரி 15:34 2கொரி 4:6 எபே 1:17 2பேது 2:20 1யோவா 2:3 1யோவா 2:4 1யோவா 5:20
10நாள், மாதம், காலம், ஆண்டு என்று பார்க்கிறீர்கள்!லேவி 23:1-44 லேவி 25:1 லேவி 25:13 எண் 28:1-29 ரோம 14:5 கொலோ 2:16 கொலோ 2:17
11உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது.கலா 4:20 2கொரி 11:2 2கொரி 11:3 2கொரி 12:20 2கொரி 12:21
12சகோதர சகோதரிகளே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்: நான் உங்களைப்போல ஆனேன் அல்லவா? நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை.கலா 2:14 கலா 6:14 ஆதி 34:15 1இரா 22:4 அப் 21:21 1கொரி 9:20-23 பிலிப் 3:7 பிலிப் 3:8
13என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது. இது உங்களுக்குத் தெரியுமே.1கொரி 2:3 2கொரி 10:10 2கொரி 11:6 2கொரி 11:30 2கொரி 12:7-10 2கொரி 13:4
14என் உடல்நிலையை முன்னிட்டு என்னைப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்கும் சோதனை உங்களுக்கு வரவில்லை. அதற்கு மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வதுபோல் ஏன், கிறிஸ்து இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.கலா 4:13 யோபு 12:5 சங் 119:141 பிரச 9:16 ஏசா 53:2 ஏசா 53:3 1கொரி 1:28 1கொரி 4:10 1தெச 4:8
15என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள். அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள்! உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.கலா 3:14 கலா 5:22 கலா 6:4 லூக் 8:13 ரோம 4:6-9 ரோம 5:2 ரோம 15:13
16இப்போது உங்களுக்கு உண்மையைச் சொன்னதால் உங்கள் பகைவன் ஆனேனா?கலா 3:1-4 1இரா 18:17 1இரா 18:18 1இரா 21:20 1இரா 22:8 1இரா 22:27 2நாளா 24:20-22 2நாளா 25:16 சங் 141:5 நீதி 9:8 யோவா 7:7 யோவா 8:45
17முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானது அல்ல: நீங்களும் அதே ஆர்வம் காட்ட வேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள்.கலா 6:12 கலா 6:13 மத் 23:15 ரோம 10:2 ரோம 16:18 1கொரி 11:2 2கொரி 11:3 2கொரி 11:13-15 பிலிப் 2:21 2பேது 2:3 2பேது 2:18
18உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே: ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.எண் 25:11-13 சங் 69:9 சங் 119:139 ஏசா 59:17 யோவா 2:17 1கொரி 15:58 தீத் 2:14 வெளிப் 3:19
19என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.1கொரி 4:14 1தீமோ 1:2 தீத் 1:4 பிலேமோ 1:10 பிலேமோ 1:19 யாக் 1:18 1யோவா 2:1 1யோவா 2:12 1யோவா 5:21
20உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது. இப்பொழுது உங்களோடு இருந்து வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும்!1கொரி 4:19-21 1தெச 2:17 1தெச 2:18 1தெச 3:9
21திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே, அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?கலா 4:9 கலா 3:10 கலா 3:23 கலா 3:24 ரோம 6:14 ரோம 7:5 ரோம 7:6 ரோம 9:30-32 ரோம 10:3-10
22ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்: மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.ஆதி 16:2-4 ஆதி 16:15-4 ஆதி 21:1 ஆதி 21:2 ஆதி 21:10
23அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்: உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.ரோம 9:7 ரோம 9:8
24இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.எசே 20:49 ஓசி 11:10 மத் 13:35 1கொரி 10:11 எபிரெ 11:19
25அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு அடையாளம். ஏனெனில் இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.உபா 33:2 நியா 5:5 சங் 68:8 சங் 68:17 எபிரெ 12:18
26மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்: நமக்கு அன்னை.சங் 87:3-6 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 52:9 ஏசா 62:1 ஏசா 62:2 ஏசா 65:18 ஏசா 66:10 யோவே 3:17 மீகா 4:1 மீகா 4:2 பிலிப் 3:20 எபிரெ 12:22 வெளிப் 3:12 வெளிப் 21:2 வெளிப் 21:10-27
27ஏனெனில், “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்” என்று மறைநூலில் எழுதியுள்ளது.ஏசா 54:1-5
28ஆகவே சகோதர சகோதரிகளே, நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்.கலா 4:23 கலா 3:29 அப் 3:25 ரோம 4:13-18 ரோம 9:8 ரோம 9:9
29ஆனால் இயல்பான முறைப்படி பிறந்தவன் தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது.ஆதி 21:9
30எனினும் மறைநூல் கூறுவதென்ன? “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்தி விடும்: ஏனெனில் அடிமைப் பெண்ணின் மகன் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக்கூடாது.”கலா 3:8 கலா 3:22 ரோம 4:3 ரோம 11:2 யாக் 4:5
31ஆகவே சகோதர சகோதரிகளே, நம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல: உரிமைப் பெண்ணின் மக்கள்.கலா 5:1 கலா 5:13 யோவா 1:12 யோவா 1:13 யோவா 8:36 எபிரெ 2:14 எபிரெ 2:15 1யோவா 3:1 1யோவா 3:2

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.