இணை வசன வேதாகமம்

Click to Subscribe

ஏசாயா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, “நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்: எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்வோம்: உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக” என்பார்கள்.ஏசா 2:11 ஏசா 2:17 ஏசா 10:20 ஏசா 17:7 லூக் 21:22
2அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்: நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.ஏசா 11:1 ஏசா 60:21 எரே 23:5 எரே 33:15 எசே 17:22 எசே 17:23 சகரி 3:8 சகரி 6:12
3அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும், “புனிதர்” எனப் பெயர் பெறுவர்: உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் “புனிதர்” எனப்படுவர்.ஏசா 1:27 ஏசா 52:1 ஏசா 60:21 எசே 36:24-28 எசே 43:12 சகரி 14:20 சகரி 14:21 எபே 1:4 கொலோ 3:12 எபிரெ 12:14 1பேது 2:9
4என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்: நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்.ஏசா 3:16-26 புலம் 1:9 எசே 16:6-9 எசே 22:15 எசே 36:25 எசே 36:29 யோவே 3:21 செப் 3:1 சகரி 3:3 சகரி 3:4 சகரி 13:1 சகரி 13:9 மல்கி 3:2 மல்கி 3:3
5சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்: புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்: ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒருவிதான மண்டபம் இருக்கும்.ஏசா 32:18 ஏசா 33:20 சங் 87:2 சங் 87:3 சங் 89:7 சங் 111:1 மத் 18:20 மத் 28:20
6அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.ஏசா 8:14 ஏசா 25:4 சங் 27:5 சங் 91:1 சங் 121:5 சங் 121:6 நீதி 18:10 எசே 11:16 எபிரெ 6:18 வெளிப் 7:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.