வேதாகமத்தை வாசி

மல்கியா 4

                   
புத்தகங்களைக் காட்டு
1“இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
2“ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள். நான் செயலாற்றும் அந்நாளில் கொடியோரை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்.
3அவர்கள் உங்கள் உள்ளங்காலுக்கு அடியில் சாம்பலைப்போல் ஆவார்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
4“ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.
5இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.
6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.”

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.