1 | அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். | மாற் 1:21 மத் 12:9-14 லூக் 6:6-11 |
2 | சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். | சங் 37:32 ஏசா 29:20 ஏசா 29:21 எரே 20:10 தானி 6:4 லூக் 6:7 லூக் 11:53 லூக் 11:54 லூக் 14:1 லூக் 20:20 யோவா 9:16 |
3 | இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். | ஏசா 42:4 தானி 6:10 லூக் 6:8 யோவா 9:4 1கொரி 15:58 கலா 6:9 பிலிப் 1:14 பிலிப் 1:28-30 1பேது 4:1 |
4 | பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். | மாற் 2:27 மாற் 2:28 ஓசி 6:6 மத் 12:10-12 லூக் 6:9 லூக் 13:13-17 லூக் 14:1-5 |
5 | அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. | லூக் 6:10 லூக் 13:15 எபே 4:26 வெளிப் 6:16 |
6 | உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். | சங் 109:3 சங் 109:4 மத் 12:14 லூக் 6:11 லூக் 20:19 லூக் 20:20 லூக் 22:2 யோவா 11:53 |
7 | இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, | மத் 10:23 மத் 12:15 லூக் 6:12 யோவா 10:39-41 யோவா 11:53 யோவா 11:54 அப் 14:5 அப் 14:6 அப் 17:10 அப் 17:14 |
8 | எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். | ஏசா 34:5 எசே 35:15 எசே 36:5 மல்கி 1:2-4 |
9 | மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார். | மாற் 5:30 யோவா 6:15 |
10 | ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர். | மத் 12:15 மத் 14:14 |
11 | தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. | மாற் 1:23 மாற் 1:24 மாற் 5:5 மாற் 5:6 மத் 8:31 லூக் 4:41 அப் 16:17 அப் 19:13-17 யாக் 2:19 |
12 | அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார். | மாற் 1:25 மாற் 1:34 மத் 12:16 அப் 16:18 |
13 | அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். | மத் 10:1-4 லூக் 6:12-16 |
14 | தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்: | யோவா 15:16 அப் 1:24 அப் 1:25 கலா 1:1 கலா 1:15-20 |
15 | அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். |
16 | அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், | மாற் 1:16 மத் 16:16-18 யோவா 1:42 1கொரி 1:12 1கொரி 3:22 1கொரி 9:5 கலா 2:7-9 |
17 | செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார். | மாற் 1:19 மாற் 1:20 மாற் 5:37 மாற் 9:2 மாற் 10:35 மாற் 14:33 யோவா 21:2 யோவா 21:20-25 அப் 12:1 |
18 | அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், | யோவா 1:40 யோவா 6:8 யோவா 12:21 யோவா 12:22 அப் 1:13 |
19 | இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர். | மத் 26:14-16 மத் 26:47-16 மத் 27:3-5 யோவா 6:64 யோவா 6:71 யோவா 12:4-6 யோவா 13:2 யோவா 13:26-30 அப் 1:16-25 |
20 | அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. | மாற் 3:9 மாற் 6:31 லூக் 6:17 யோவா 4:31-34 |
21 | அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். | மாற் 3:31 யோவா 7:3-10 |
22 | மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும்”பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். | மாற் 7:1 மத் 15:1 லூக் 5:17 |
23 | ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? | சங் 49:4 மத் 13:34 |
24 | தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. | நியா 9:23-57 நியா 12:1-6 2சாமு 20:1 2சாமு 20:6 1இரா 12:16-20 ஏசா 9:20 ஏசா 9:21 ஏசா 19:2 ஏசா 19:3 எசே 37:22 சகரி 11:14 யோவா 17:21 1கொரி 1:10-13 எபே 4:3-6 |
25 | தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. | ஆதி 13:7 ஆதி 13:8 ஆதி 37:4 சங் 133:1 கலா 5:15 யாக் 3:16 |
26 | சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. |
27 | முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். | ஆதி 3:15 ஏசா 27:1 ஏசா 49:24-26 ஏசா 53:12 ஏசா 61:1 மத் 12:29 லூக் 10:17-20 லூக் 11:21-23 யோவா 12:31 ரோம 16:20 எபே 6:10-13 கொலோ 2:15 எபிரெ 2:14 1யோவா 3:8 1யோவா 4:4 வெளிப் 12:7-9 வெளிப் 20:1-3 |
28 | உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்: அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். | மத் 12:31 மத் 12:32 லூக் 12:10 எபிரெ 6:4-8 எபிரெ 10:26-31 1யோவா 5:16 |
29 | ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” | மாற் 12:40 மத் 25:46 2தெச 1:9 யூதா 1:7 யூதா 1:13 |
30 | “இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது” என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார். | மாற் 3:22 யோவா 10:20 |
31 | அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். | மத் 12:46-48 லூக் 8:19-21 |
32 | அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். |
33 | அவர் அவர்களைப் பார்த்து, “என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு, | உபா 33:9 லூக் 2:49 யோவா 2:4 2கொரி 5:16 |
34 | தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. | சங் 22:22 உன்ன 4:9 உன்ன 4:10 உன்ன 5:1 உன்ன 5:2 மத் 12:49 மத் 12:50 மத் 25:40-45 மத் 28:10 லூக் 11:27 லூக் 11:28 யோவா 20:17 ரோம 8:29 எபிரெ 2:11 எபிரெ 2:12 |
35 | கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார். | மத் 7:21 யோவா 7:17 யாக் 1:25 1யோவா 2:17 1யோவா 3:22 1யோவா 3:23 |