ஏசாயா 49:24-26 - WCV
24
வலியோனின் கையினின்று, கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா? வெற்றி வீரனிடமிருந்து, சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?
25
ஆண்டவர் கூறுவது இதுவே: சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்: கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்: உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்: உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.
26
உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்: அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்: அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்' என்று அறிந்து கொள்வர்.